மாற்று வீரராக வந்தும் ‘ஹாட்ரிக்’ கோல்

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­காற்பந்தின் இந்­தப் பரு­வத்­தில் இன்­னும் ஒரு கோல்­கூட அடிக்­கா­த­தால் தமது ஆட்­டத்­தி­றன் குறித்­துக் கேள்வி எழுப்­பி­யோர்க்கு 'ஹாட்­ரிக்' கோல் மூலம் பதி­லடி கொடுத்­துள்­ளார் இங்­கி­லாந்து, டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் குழு­வின் தலை­வர் ஹேரி கேன் (படம்).

இந்­தப் பரு­வத்­தில் முதன்­மு­றை­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள யூரோப்பா கான்­ஃப­ரன்ஸ் லீக்­கில், ஸ்லோ­வே­னி­யா­வின் என்­எஸ் மூரா குழு­வும் ஸ்பர்ஸ் குழு­வும் நேற்று அதி­காலை நடந்த ஆட்­டத்­தில் மோதின.

அந்த ஆட்­டத்­தில் முதல் பதி­னொ­ரு­வ­ரில் ஒரு­வ­ராக இடம்­பெறாத நிலை­யில், கடைசி அரை­மணி நேரத்­திற்­கு­முன் மாற்று வீர­ரா­கக் கள­மி­றக்­கப்­பட்­டார் கேன்.

அப்­போதே 2-1 என ஸ்பர்ஸ் குழு முன்­னி­லை­யில் இருக்க, 68, 77, 88வது நிமி­டங்­களில் மூன்று கோல்­களை அடித்து முத்­திரை பதித்­தார் கேன். இதனால், ஸ்பர்ஸ் 5-1 என வெற்­றி­பெற்­றது.

"முன்­கள வீரர்­கள் எல்­லா­ருமே கோல­டிக்க விரும்­பு­வர். நான் உதைக்­கும் பந்து வலையை முத்­த­மி­டும்­போ­தெல்­லாம் நன்­றாக உணர்­கி­றேன்," என்­றார் கேன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!