பிரதியெடுக்க முடியாத கலைஞன்

நடி­கர் சிவாஜி கணே­ச­னின் 93வது பிறந்­த­நா­ளான நேற்று அவரை கௌர­விக்­கும் வகை­யில் 'கூகுள்' நிறு­வ­னம் 'டூடுல்' வெளி­யிட்டு சிறப்­பித்­துள்­ளது.

நடி­கர் சிவாஜி கணே­சன் திரைப்­ப­டங்­களில் நடிக்­கத் துவங்­கும் முன், மேடை நாட­கங்­களில் நடித்து வந்­தார். 'சிவாஜி கண்ட இந்து ராஜ்­யம்' என்ற நாட­கத்­தில் பேர­ர­சர் சிவா­ஜி­யாக நடித்த கணே­ச­னின் நடிப்­புத்­தி­றனை பாராட்­டிய ஈ.வெ.ராம­சாமி அவரை 'சிவாஜி கணே­சன்' என அழைத்­தார்.

பிறகு அதுவே அவ­ரது பெய­ராக நிலைத்­தது. 1952ல் வெளி­வந்த 'பரா­சக்தி' படம் மூலம் திரை­யு­ல­குக்­குள் நுழைந்த அவர், 300க்கும் மேற்­பட்ட தமிழ் படங்­கள், 9 தெலுங்கு படம், இரண்டு இந்தி படம், ஒரு மலை­யாள படத்­தி­லும் நடித்­துள்­ளார்.

சிவாஜி நடித்த சரித்­திர வீரர் க­ளின் கதா­பாத்­தி­ரங்­க­ளான 'மனோ­கரா', 'ராஜ ராஜ சோழன்', 'கர்­ணன்' போன்ற திரைப்­ப­டங்­கள் வச­னத்­திற்­கா­கப் பெயர் பெற்­றவை.

அதைப்­போல 'வீர­பாண்­டிய கட்­ட­பொம்­மன்', 'கப்­ப­லோட்­டிய தமி­ழன்' போன்ற தேச தலை­வர்­

க­ளின் பாத்­தி­ரங்­களை ஏற்­றுத் திறம்­பட நடிக்கவும் செய்­தார்.

மேலும் புரா­ண­கால கட­வுள்­

க­ளான அனைத்து

கட­வு­ளின் கதா­பாத்­தி­ரங்­களில் நடித்­துள்­ளார். 'திரு­வி­ளை­யா­டல்', 'சரஸ்­வதி சப­தம்', 'திரு­வ­ருட்­செல்­வர்', 'கந்­தன் கருணை', 'திரு­மால் பெருமை' ஆகிய படங்கள் அவற்றில் அடங்கும். மேலும் திரைப்­ப­டத்­தில் இவர் சிவ­பெ­ரு­மா­னாக நடித்­த­தைப் பார்த்த மக்­கள்,

"சிவ­பெ­ரு­மானுக்கே உரு­வம் கொடுத்­த­வர் சிவாஜி கணே­சன்," என்று புகழ்ந்தனர்.

'செவா­லி­யர்' பட்­டம் பெற்ற முதல் இந்­தி­யர் சிவாஜி கணே­சன். அதோடு 'கலை­மா­மணி' விருது, 'பத்­ம­ஸ்ரீ' விருது, 'பத்ம பூஷன்' விருது, 'தாதா சாகெப் பால்கே' விருது என பல விருது­கள் இவரை கௌர­வித்தன.

இவ­ரு­டைய பிறந்­த­நாள் அரசு விழா­வாக கொண்­டா­டப்­படும் என அறிவித்து, தமிழக அரசு நேற்று சிவாஜி விழாவை சிறப்பாகக் கொண்டாடியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!