வெற்றிப் பயணத்தைத் தொடரும் பிரேசில்

கராக்கஸ்: அடுத்த ஆண்டிற்கான உலகக் கிண்ணக் காற்பந்துத் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் பிரேசில் அணி வெற்றிநடை போட்டு வருகிறது. இதுவரை ஆடிய ஒன்பது ஆட்டங்களிலும் அவ்வணி வாகை சூடியுள்ளது.

வெனிசுவேலா அணிக்கெதிராக சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை நடந்த ஆட்டத்தில் முதலில் முன்னிலையை விட்டுக்கொடுத்தபோதும் 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றியைத் தனதாக்கியது.

எரிக் ரமிரெஸ் 11வது நிமிடத்தில் அடித்த கோலால் வெனிசுவேலா முன்னிலை பெற்றது. அதன்பின் ஒரு மணி நேர ஆட்டம் அதே நிலையில் சென்றது. ஆனாலும், 71வது நிமிடத்தில் மார்க்குவினோசும் 85வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு மூலம் கேப்ரியல் பார்போசாவும் கோலடித்து, பிரேசிலை முன்னிலைக்குக் கொண்டுசென்றனர்.

மாற்று வீரராக வந்த ஆன்டனி, இடைநிறுத்தத்திற்கான கூடுதல் நேரத்தில் கோலடிக்க, வெனிசுவேலாவிற்கு வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போலானது. இதனால், சொந்த அரங்கிலேயே வெனிசுவேலா தோற்றுப்போனது.
அர்ஜெண்டினா - பராகுவே அணிகள் மோதிய இன்னோர் ஆட்டம் கோலின்றிச் சமநிலையில் முடிந்தது.

அர்ஜெண்டினாவும் இதுவரை ஓர் ஆட்டத்தில்கூட தோற்காமல் இரண்டாமிடத்தில் இருந்தாலும் பிரேசிலைவிட அது எட்டுப் புள்ளிகள் குறைவாகப் பெற்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!