புதிய முகங்கள் அபாரம்

அண்­டோரா லா வெய்ஜா

(அண்­டோரா): உல­கக் கிண்­ணத் தகுதி ஆட்­டத்­தில் அண்­டோ­ராவை 5-0 எனும் கோல் கணக்­கில் வீழ்த்தி­யுள்ளது இங்­கி­லாந்து. இந்த 'ஐ' பிரிவு ஆட்­டத்­தில் இது­வரை இங்­கி­லா­ந்து அணி­யில் அதி­கம் இடம்­பெ­றா­மல் இருந்த டேமி ஆப்­ர­ஹேம், ஜேம்ஸ் வார்ட்-பிரெ­ளஸ் போன்ற வீரர்­கள் சிறப்­பாக ஆடி­னர். புக்­காயோ சாக்கா, ஜேடன் சாஞ்சோ, ஃபில் ஃபோடன் போன்ற இளம் விளை­யாட்­டா­ளர்­களும் அசத்தி முத்­தி­ரை ­பதிக்­கத் தொடங்­கி­னர். பென் சில்வெல், புக்காயோ சாக்கா, டேமி ஆப்ரஹேம், ஜேம்ஸ் வார்ட்-பிரெளஸ், ஜேக் கிரீலிஷ் ஆகியோர் கோல்களை அடித்தனர். சில்வெல், கிரீலிஷ் இருவரும் முதன்முறையாக இங்கிலாந்துக்கு கோலடித்தனர்.

இவ்­வாண்டு யூரோ 2020 போட்டி யின் இறு­தி­யாட்­டத்­திற்­குத் தகு­தி­பெற்­றது இங்­கி­லாந்து. பெனால்­டி­களில் இத்­தா­லி­யி­டம் தோல்­வி­ய­டைந்­தி­ருந்­தா­லும் அது 55 ஆண்­டு­களில் அனைத்­து­ல­கப் போட்டி ஒன்­றில் இங்­கி­லாந்து தகு­தி­பெற்ற முதல் இறு­தி­யாட்­டம்.

பொது­வா­கப் பல­ரின் கண்­ட­னத்­திற்கு உள்­ளா­கும் இங்­கி­லாந்­தின் விளை­யாட்டு அண்­மைக் கால­மாக விறு­வி­றுப்­பாக இருந்து வந்­துள்­ளது. அணி­யில் உள்ள சில இளம் வீரர்­க­ளின் துடிப்புமிக்க ஆட்­டம் இதற்­கு ஒரு கார­ணம். 'ஐ' பிரி­வில் முத­லி­டத்தை வகிக்­கும் இங்­கி­லாந்து, தொடர்ந்து ஆறா­வது முறை­யாக உல­கக் கிண்­ணப் போட்­டிக்­குத் தகு­தி­பெ­று­வது கிட்­டத்­தட்ட உறு­தி­யா­கி­விட்­டது.

கேரத் சவுத்­கேட்­டின் அணி, இது­வரை விளை­யா­டி­யுள்ள ஏழு ஆட்­டங்­களில் ஆறை வென்­றுள்­ளது. ஓர் ஆட்­டம் சம­நி­லை­யில் முடிந்­தது. ஏழு ஆட்­டங்­களில் 23 கோல்­க­ளைக் குவித்­துள்­ளது இங்­கி­லாந்து.

அடுத்­த­தாக இங்­கி­லாந்து நாளை ஹங்­கே­ரி­யைச் சந்­திக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!