ஸ்காட்லாந்துக்கு உலகக் கிண்ண வாய்ப்பு

கிளாஸ்கோ: கடந்த ஐந்து உல­கக் கிண்­ணப் போட்­டி­க­ளுக்­குத் தகு­தி­பெ­றாத ஸ்காட்­லாந்து அடுத்த ஆண்­டுப் போட்­டிக்­குச் செல்­லும் வாய்ப்­பைத் தக்க வைத்­துக்­கொண்டுள்­ளது. எஃப் பிரி­வில் இஸ்­ரே­லுக்கு எதி­ரான ஆட்­டத்­தின் கடைசி தரு­ணத்­தில் வெற்றி கோலை அடித்து 3-2 எனும் கோல் கணக்­கில் ஸ்காட்­லாந்து வென்­றது. வெற்றி கோலை அடித்­த­வர் மான்­செஸ்­டர் யுனைட்­டெட்­ அணியின் ஸ்காட் மெக்­டோ­மினே.

ஆட்­டத்­தில் இரண்டு முறை முன்­ன­ணிக்­குச் சென்ற இஸ்­ரேலைப் போராடி வென்ற ஸ்காட்­லாந்து, எஃப் பிரிவில் இது­வரை விளை­யா­டி­யுள்ள ஏழு ஆட்­டங்­களில் நான்கை வென்­றுள்­ளது ஒன்­றில் தோல்­வி­ய­டைந்­தது. இரு ஆட்­டங்­கள் சம­நி­லை­யில் முடிந்­தன.

ஃபிரான்­சில் நடை­பெற்ற 1998ஆம் ஆண்டு இறுதிச் சுற்றுக்குப் பிறகு ஸ்காட்­லாந்து உல­கக் கிண்­ண இறுதிச் சுற்றுக்குத் தகு­தி­பெ­ற­வில்லை. இன்­னும் சொல்லப்போனால் அணி எந்த அனைத்­து­ல­கப் போட்­டிக்­கும் தகுதி­பெ­றா­மல் இருந்­தது, இவ்­வாண்டு நடை­பெற்ற யூரோ 2020 போட்டி வரை.

அர்­ஜென்­டி­னா­வில் நடை­பெற்ற 1978ஆம் ஆண்டு உல­கக் கிண்­ண இறுதிச் சுற்றில் பல நட்­சத்­திர விளை­யாட்­டா­ளர்­க­ளைக் கொண்­டி­ருந்த ஸ்காட்­லாந்­திற்­குக் கிண்­ணத்தை வெல்­லக்­கூ­டிய ஆற்­றல் இருந்­த­தா­கப் பல தரப்­பி­னர் கூறி­னர். மெத்­த­ன­மாக இருந்­த­தால் முதல் சுற்­றைத் தாண்­டா­விட்­டா­லும் அப்­போட்­டி­யில் நெதர்­லாந்­துக்கு எதி­ரான அதன் அபார ஆட்­டம் இன்­றும் காற்­பந்து வர­லாற்­றில் அசைக்க முடி­யாத இடத்­தைப் பிடித்த ஒரு நிகழ்வு. அன்றைய நெதர்­லாந்து அணி, 1974, 1978 போட்­டி­களில் இறு­தியாட்டத்திற்குச் சென்­றது, காற்­பந்து உல­கின் கவ­னத்­தைத் தன்­வ­சப்­ப­டுத்­தி­யது.

நேற்­றைய ஆட்­டத்­திற்­குப் பிறகு எஃப் பிரி­வில் இரண்­டாம் இடத்தை வகிக்­கிறது ஸ்காட்­லாந்து. தகு­திப் பிரி­வு­களில் இரண்­டாம் இடத்­தில் உள்ள அணி­கள் 'ப்ளே­யாஃப்' தகு­திச் சுற்­றுக்­குச் செல்­லும். இதை வென்­றால் உல­கக் கிண்­ணத்­திற்­குத் தகு­தி­பெ­றும். முத­லி­டத்­தில் உள்ள அணி­கள் போட்­டி­யில் இடம்­பெ­று­வது உறுதி.

21 ஆண்டு வலியைப் போக்கத் துடிக்கும் ஸ்காட்லாந்து, இஸ்ரேலை வென்றது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!