மனம் திறந்தார் பிஎஸ்ஜி வீரர் லயனல் மெஸ்ஸி

பாரிஸ்: பார்­சி­லோனா அணி­யி­லிருந்து வெளி­யே­றப்­போ­வது தெரிந்­த­வு­டன் அதை ஏற்­றுக்­கொள்ளத்­ தான் மிக­வும் சிர­மப்­பட்­ட­தாக முன்­னாள் அணித் தலை­வ­ரான லய­னல் மெஸ்ஸி தெரி­வித்­துள்­ளார். கோப்பா அமெ­ரிக்கா போட்டி முடிந்த பிறகு புதிய ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்டு தொடர்ந்து பார்­சி­லோனா அணி­யில் விளை­யாட எண்­ணம் கொண்­டி­ருந்­த­தா­கச் சொன்­னார் மெஸ்ஸி.

"ஒப்­பந்­தத்­தில் கையெ­ழுத்­திட்ட உட­னே பயிற்­சி­யில் ஈடு­பட நான் எண்­ணம் கொண்­டி­ருந்­தேன். எல்­லாம் சுமு­க­மா­கப் போனது என்­றும் நான் கையெ­ழுத்­தி­டு­வ­து­தான் மிச்­சம் என்­றும் நான் நினைத்­தேன்.

"ஆனால் நான் திரும்பி வந்­த­வு­டன் அது சாத்­தி­ய­மில்லை என்று என்­னி­டம் கூறி­னர்," என்று 34 வயது மெஸ்ஸி சொன்­னார்.

பெரும் நிதி நெருக்­க­டி­யில் சிக்கியுள்ள பார்­சி­லோ­னாவால் மெஸ்­ஸிக்கான சம்­ப­ளத்­தைக் கொடுக்க இய­ல­வில்லை. மெஸ்­ஸியை வைத்­தி­ருக்க முடி­யா­த­தால் வருந்­திய அணி­யின் நிர்­வா­கத் தலை­வர் ஜோவென் லப்­போர்ட்டா, விளை­யாட்­டா­ளர்­கள், பயிற்­று­விப்­பா­ளர்­கள், இயக்­கு­நர்­கள் என அனை­வ­ரை­யும்­விட அணி­தான் முக்­கி­யம் என்­றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!