உலகக் கிண்ணத்தில் ஜெர்மனி

ஸ்கொப்யி (நார்த் மாசி­டோ­னியா): நார்த் மாசி­டோ­னி­யாவை 4-0 எனும் கோல் கணக்­கில் வென்று அடுத்த உல­கக் கிண்­ணக் காற்பந்துப் போட்டிக்­குத் தான் தகுதிபெற்றுள்ளது ஜெர்­மனி. ஐரோப்­பிய கண்­டத்­திற்­கான உல­கக் கிண்­ணத் தகு­திச் சுற்­று­க­ளின் ஜே பிரிவில் ஜெர்­மனி முத­லி­டத்தை வகிக்­கிறது.

இப்­பி­ரி­வில் எஞ்­சி­யுள்ள இரண்டு ஆட்­டங்­க­ளைத் தோற்­றா­லும் முதலி­டத்­தைத் தக்­க­வைத்­துக்­கொள்ள போது­மான புள்­ளி­க­ளைப் பெற்­றுள்­ளது ஜெர்மனி. ஒவ்­வொரு பிரி­வி­லும் முத­லி­டத்­தைப் பிடிக்­கும் அணி உல­கக் கிண்­ணத்­திற்­குத் தகு­தி­பெ­றும், இரண்­டாம் இடத்தை வகிக்­கும் அணி 'பிளே­ஆஃப்' எனும் கடைசி தகு­திச் சுற்­றுக்­குச் சென்று போட்டிக்குத் தகுதிபெற முயற்சி செய்யும்.

ஜெர்மனியின் நான்கு கோல்­களும் பிற்­பா­தி­யாட்­டத்­தில் விழுந்­தன. இங்­கி­லாந்­தின் செல்சி அணி­யைச் சேர்ந்த காய் ஹெவர்ட்ஸ் ஒரு கோலை அடித்­தார். மற்­றொரு செல்சி விளை­யாட்­டா­ள­ரான திமோ வர்­னர் இரண்டு கோல்­களை அடித்­தார். ஜமால் முசி­யாலா நான்­கா­வது கோலை அடித்­தார்.

மேற்கு ஜெர்­ம­னி­யாக மூன்று முறை­யும் ஒருங்­கி­ணைந்த ஜெர்மனியாக ஒருமுறை­யும் உலகக் கிண்­ணத்தை வென்­றுள்­ளது ஜெர்­மனி.

ஆனால் ரஷ்­யா­வில் நடை­பெற்ற சென்ற உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் இவ்­வணி முதல் சுற்­றைத் தாண்­டவில்லை. கடந்த சில ஆண்டு­க­ளா­கத் தொடர்ந்து சிறப்­பாக ஆட சிர­மப்­பட்டு வரு­கிறது ஜெர்­மனி. அதை மாற்­றும் இலக்­கைக் கொண்­டுள்­ளார் அணி­யின் புதிய பயிற்­று­விப்­பா­ளர் ஹன்சி ஃபிலிக். ஜே பிரி­வில் தற்­போது இரண்­டாம் இடத்­தில் ருமே­னியா உள்­ளது.

ஜி பிரி­வில் ஜிப்­ரால்­டாவை 6-0 எனும் கோல் கணக்­கில் வீழ்த்­தி­யது நெதர்­லாந்து. இப்­பி­ரி­வில் அவ்­வணி முத­லி­டத்தை வகிக்­கிறது. சென்ற உல­கக் கிண்­ணத்­திற்­குத் தகு­தி­பெ­றத் தவ­றிய நெதர்­லாந்து, 1974ஆம் ஆண்டு போட்­டி­யில் படைத்த அபார விளை­யாட்டு இன்­ன­மும் ரசி­கர்­க­ளின் மனத்­தில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!