வாகைசூட வரிந்துகட்டும் வல்லவர்கள்

துபாய்: திட­லில் இடியே விழுந்­தா­லும் முகத்­தில் இம்­மி­ய­ள­வும் உணர்ச்­சியை வெளிப்­ப­டுத்­தாத அணித்­த­லை­வர்­கள் இருவர், இன்று ஒரு­வ­ரை­யொ­ரு­வர் களத்­தில் எதிர்த்தாடவுள்ளனர்.

ஒரு­வர், ஒரு­நாள், டி20 உல­கக் கிண்­ணங்­கள், சாம்­பி­யன்ஸ் டிராபி, டெஸ்ட் போட்­டி­களில் உல­கத் தர­வரிசை­யில் முத­லி­டம் என்று இந்­திய அணியை உச்­சத்­திற்­குக் கொண்டு சென்ற மகேந்­திர சிங் டோனி.

இன்­னொ­ரு­வர், 2019ஆம் ஆண்டு ஒரு­நாள் போட்­டி­க­ளுக்­கான உல­கக் கிண்­ணத்தை வென்ற இங்­கி­லாந்து அணி­யின் தலை­வர் ஆய்ன் மோர்­கன்.

இம்­முறை இவ்­வி­ரு­வ­ரும் தத்­தம் தேசிய அணி­க­ளுக்­குத் தலைமை ஏற்று வழி­ந­டத்­த­வில்லை. உல­கின் ஆகப் பெரிய டி20 கிரிக்­கெட் லீக்­கான இந்­திய பிரி­மி­யர் லீக் (ஐபி­எல்) தொட­ரில் இவர்­கள் தலை­மை­யி­லான அணி­கள், இறு­திப் போட்­டி­யில் கிண்­ணத்­திற்­காக இன்று மல்­லுக்­கட்­டு­கின்­றன.

டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே மும்முறை ஐபிஎல் தொடரை வென்று உள்ளது. அவ்வணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருப்பது இது 9வது முறை.

டி20 போட்டி என்­றாலே அதி­ர­டி­தான், அதற்கு இள­மை­யும் துடிப்­புமே தேவை என மற்ற அணி­கள் கரு­தி­னா­லும் அனு­ப­வமே கைகொ­டுக்­கும் என்­பதை டோனி உறு­தி­யாக நம்­பு­கிறார். அத­னால்­தான் 40 வய­தைத் தாண்­டி­விட்ட டோனி, பிராவோ (38), டு பிளஸ்ஸி (37), ராயுடு (36), உத்தப்பா (35), மொயீன் அலி (34), ஜடேஜா (32) என அனுபவப் பட்டாளத்துடன் களமிறங்குகிறார்.

அதே நேரத்­தில், இளம் திற­னா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு, பட்டை தீட்­ட­வும் அவர் தவ­ற­வில்லை. ஷேன் வாட்­சன் ஓய்­வு­பெற்­ற­தும் அந்த வாய்ப்பை இளம் வீரர் ருது­ராஜ் கெய்க்­வாட்­டிற்கு வழங்­கி­னார் டோனி. கடந்த முறை தொடக்­கத்­தில் சில போட்­டி­களில் ஏமாற்­ற­ம­ளித்­தா­லும், நடப்பு ஐபி­எல்லில் 600 ஓட்டங்களுக்குமேல் குவித்து, அணி­யின் புதிய நம்­பிக்கை நட்­சத்­தி­ர­மாக உரு­வெ­டுத்­துள்­ளார் ருதுராஜ்.

அத்துடன், மூன்றாவது வீரராகக் கடந்த இரு போட்டிகளில் களம்கண்ட உத்தப்பாவும் நல்ல ஆட்டத்திறனுக்குத் திரும்பியிருப்பது சென்னை அணிக்குக் கூடுதல் வலுசேர்க்கும்.

கோல்கத்தா அணியைப் பொறுத்த மட்டில், புதிய வரவான வெங்கடேஷ் ஐயர் வியப்பளிக்கும் வகையில் விளையாடி வருகிறார். இக்கட்டான சூழ்நிலைகளில் ராகுல் திரிபாதி கைகொடுக்கிறார். அணித்தலைவர் மோர்கன், தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரின் பந்தடிப்பு கவலை தருவதாக உள்ளது. பந்துவீச்சில் அவ்வணி வலிமையுடன் இருக்கிறது.

காம்­பீர் தலைமையில் ஏற்­கெ­னவே இரு­முறை இறு­திப் போட்­டிக்கு முன்­னே­றிய கோல்­கத்தா அணி, அவ்விரு முறையும் வெற்றியைச் சுவைத்தது.

நேற்று முன்­தி­னம் நடந்த பரபரப்பான 'குவா­லி­ஃபை­யர் 2' ஆட்­டத்­தில் அவ்­வணி ஒரு பந்து எஞ்சிய நிலையில், மூன்று விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியைத் தோற்கடித்தது.

அச்சுறுத்தும் சுழற்கூட்டணி

கோல்கத்தா அணியின் (வலமிருந்து) சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, ஷாகிப் அல் ஹசன் என்ற இந்தச் சுழற்கூட்டணி, ஓட்டமெடுக்க விடாமல் கஞ்சத்தனமாகப் பந்துவீசியும் முக்கியமான நேரங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியும் எதிரணிகளுக்குச் சிம்மசொப்பனமாக விளங்கி வருகின்றது. இன்றைய போட்டியிலும் இவர்களின் பந்துகளை எதிர்கொண்டு ஓட்டம் குவிக்க சென்னை அணியினர் சிரமப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிரட்டும் தொடக்க இணை

ஓட்டக் குவிப்பில் இரு அணிகளின் தொடக்க வீரர்களும் சூரர்களாகத் திகழ்கின்றனர். சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் 603, டு பிளஸ்ஸி 547 ஓட்டங்களைக் குவித்துள்ளனர். கோல்கத்தா அணியின் ஷுப்மன் கில் 427, வெங்கடேஷ் ஐயர் 320 ஓட்டங்களைச் சேர்த்துள்ளனர்.

நேருக்கு நேர்

நடப்பு ஐபிஎல் தொடரில் மோதிய இரு போட்டிகளிலும் சென்னை அணியே வென்றது. 2012 இறுதிப் போட்டியில் இவ்விரு அணிகளே மோதின. அதில் கோல்கத்தா அணி வாகை சூடியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!