வெற்றிக் களிப்பில் பிஎஸ்ஜி, ரியால், ஐயேக்ஸ், போர்ட்டோ

பாரிஸ்: சாம்­பி­யன்ஸ் லீக் போட்டியில் பாரிஸ் செயிண்ட் ஜெர்­மேன், ரியால் மட்­ரிட், ஐயேக்ஸ் ஆம்ஸ்­டர்­டாம், போர்ட்டோ, இன்­டர் மிலான் ஆகிய குழுக்­கள் வெற்­றியைப் பதிவு செய்­துள்­ளன.

பிரான்ஸ் தலை­ந­கர் பாரி­ஸில் நடை­பெற்ற ஆட்­டத்­தில் ஜெர்மனி­யின் ஆர்.பி. லெய்ப்­ஸிக் குழுவை 3-2 எனும் கோல் கணக்­கில் பாரிஸ் செயிண்ட் ஜெர்­மேன் தோற்­க­டித்­தது.

ஆட்­டத்­தின் 9வது நிமி­டத்­தில் நடத்­திர ஆட்­டக்­கா­ரர் கிலி­யன் எம்­பாப்பே கோல் போட்டு பாரிஸ் செயிண்ட் ஜெர்­மேன் குழுவை முன்­னி­லைக்­குக் கொண்டு சென்­றார். ஆனால் 28வது, 57வது நிமி­டங்­களில் லெய்ப்­ஸிக் குழு கோல்­க­ளைப் போட்டு 2-1 எனும் கோல் கணக்­கில் முன்­னிலை வகித்­தது. இருப்­பி­னும், துவண்டுவிடா­மல் போரா­டிய பாரிஸ் செயிண்ட் ஜெர்­மே­னுக்­குக் கைமேல் பலன் கிட்­டி­யது.

லய­னல் மெஸ்ஸி போட்ட இரண்டு கோல்­கள் அக்­கு­ழு­வுக்கு வெற்றியைத் தேடித்

தந்­தது.

மற்­றோர் ஆட்­டத்­தில்,

ஸ்பா­னிய காற்­பந்து ஜாம்

பவான் ரியால் மட்­ரிட், உக்­ரே­னின் ஷக்­டார் டொனேட்ஸ்க் குழுவை 5-0 எனும் கோல் கணக்­கில் புரட்­டிப்­போட்­டது. மறு­நாள் தமக்கு எதி­ராக வழக்கு விசா­ரணை இருந்­தும்­கூட கரீம் பென்­சிமா கோல் போட்­டார். ரியா­லின் அதி­ரடி ஆட்­டத்­துக்கு ஈடு­கொ­டுக்க முடி­யா­மல் டொனேட்ஸ்க் குழு சுருண்­டது. ஷெரிஃப் குழு­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் இன்­டர் மிலான் 3-1 என வாகை சூடி­யது.

மற்­றோர் ஆட்­டத்­தில் ஜெர்

மனி­யின் டோர்ட்­மண்ட் குழுவை 4-0 எனும் கோல் கணக்­கில் நெதர்­லாந்­தின் ஐயேக்ஸ் ஆம்ஸ்­டர்­டாம் வீழ்த்­தி­யது. இத்­தா­லி­யின் ஏசி மிலா­னும் போர்ச்­சு­க­லின் போட்­டோ­வும் மோதிய ஆட்­டம் 1-0 எனும் கோல் கணக்­கில் போர்ட்­டோ­வுக்­குச் சாத­க­மாக முடிந்­தது. பெசிக்­டாஸ் குழுவை 4-1 எனும் கோல் கணக்­கில் ஸ்போர்ட்­டிங் குழு வென்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!