அபுதாபி: ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் நடந்துவரும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து 'சூப்பர் 12' சுற்றுடன் இந்தியா வெளியேறுகிறது.
நேற்று நடந்த போட்டியில் நியூசிலாந்தை ஆப்கானிஸ்தான் வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு என்ற நிலையில், ஆப்கானிஸ்தான் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது. அதனால், இன்றிரவு நமீபியாவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வென்றாலும் எந்தப் பயனும் கிட்டாது.
'ஏ' பிரிவில் இருந்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளும் இந்தியா இடம்பெற்றுள்ள 'பி' பிரிவில் இருந்து பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளும் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன.