'காடுகளின் கலைக்களஞ்சியம்' என்றழைக்கப்படும் துளசி கவுடா பத்மஸ்ரீ விருதுபெற்றதன் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
துளசி கவுடா 'மரங்களின் தெய்வம்' என்றும் அழைக்கப்படு கிறார்.
கலை, சமூகப் பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம் உள்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கு பவர்களுக்கு பத்ம விபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட பத்ம விருதுகள் நேற்று முன்தினமும் நேற்றும் வழங்கப்பட்டன. அதிபர் ராம்நாத் கோவிந்த் 119 பேருக்கு பத்ம விருதுகளை வழங்கினார்.
இவர்களில் கர்நாடாகாவைச் சேர்ந்த துளசி கவுடாவும் ஒருவர். 77 வயதாகும் துளசி கவுடா கர்நாடகாவின் அங்கோலா தாலுக்காவின் ஹொன்னாலி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் 30,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆவார்.