பாலி: இந்தோனேசிய மாஸ்டர்ஸ் சூப்பர்-750 பூப்பந்துப் போட்டியின் அரை
இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார்.
நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில், பி.வி. சிந்துவும் துருக்கிய வீராங்கனை நெஸ்லிகன் யிஜித்தும் மோதினர்.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து ஆதிக்கம் செலுத்திய சிந்து, 35 நிமிடங்களில் 21-13, 21-10 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றார்.
நெஸ்லிகனும் சிந்துவும் இதுவரை நான்கு முறை நேருக்கு நேர் மோதி உள்ளனர்.
அவற்றில் அனைத்துப் போட்டி
களிலும் சிந்து வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த மாதம் டென்மார்க் பொதுப் பிரிவு போட்டியிலும் நெஸ்லிகனை சிந்து வீழ்த்தினார்.
இந்தோனேசிய மாஸ்டர்ஸ் தொடரில் இதுவரை எளிதாக வெற்றி பெற்ற பி.வி. சிந்துவுக்கு அரையிறுதியில் கடும் சவால் காத்திருக்கிறது.
ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சி அல்லது தாய்லாந்து வீராங்கனை சோச்சுவாங்குடன் அவர் மோதுவார்.