டர்பன்: தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னணி பந்தடிப்பாளர்களில் ஒருவரான ஏபி டிவில்லியர்ஸ் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலுமிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"எனது பெற்றோர், சகோதரர்கள், மனைவி, குழந்தைகள் ஆகியோர் செய்த தியாகங்கள் இல்லாமல் எதுவும் நான் இவ்வளவு சாதித்திருக்க முடியாது. எங்கள் வாழ்க்கையின் அடுத்த அத்தியாயத்துக்கு முன்னுரிமை தர நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். நான் பயணம் செய்த அதே பாதையில் பயணம் செய்த என் அணி வீரர்களுக்கும் எதிரணியினருக்கும் பயிற்சியாளர்களுக்கும் இயன் மருத்துவ நிபுணர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் தென்னாப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் நான் விளையாடிய எல்லா இடங்களிலும் எனக்குக் கொடுக்கப்பட்ட ஆதரவிற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கிரிக்கெட்டால் எனக்குப் பல நன்மைகள் ஏற்பட்டுள்ளன. கற்பனை செய்ய முடியாத அனுபவங்களையும் வாய்ப்புகளையும் அது கொடுத்துள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு நம்பமுடியாத பயணம், ஆனால் நான் கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வுபெற முடிவு செய்துள்ளேன்,"
என்றார் 37 வயது டிவில்லியர்ஸ்.