நல்வழிப்படுத்தும் பொறுப்பில் ரானிக்

மான்­செஸ்­டர்: வழிமாறிப் போன இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்து அணி­யான மான்­செஸ்­டர் யுனை­டெட்டை மீண்டும் தலை­நி­மிர்ந்து நடக்­க­வைக்­கும் பெரிய பொறுப்பு இதன் புதிய நிர்­வாகி ரால்ஃப் ரானிக்கிற்கு உள்­ளது. விளை­யாட்டு சரியாக இல்லாதது மட்டுமின்றி, ஒழுங்­கின்மை, நிர்­வா­கியை அவ­மதிப்­பது என்று தவ­றான போக்கில் இவ்வணியின் விளையாட்டாளர்கள் சிலர் சென்றுகொண்டிருந்ததாகப் பல ஊட­கங்­கள் அண்­மை­யில் தெரி­வித்­தன. இன்­னும் சொல்­லப் போனால் யுனைடெட்டின் கடந்த நான்கு நிர்வாகிகளான ஒலே குனார் சோல்­ஷியா, ஜோசே மொரின்யோ, லூயி வான் ஹால், டேவிட் மொயெஸ் அனை­வரும் ஏதோ ஒரு வகை­யில் இப்­பி­ரச்­சினைக்குப் பலியானவர்கள்.

இவர்­க­ளால் செய்­ய­மு­டி­யா­ததை செய்­து­காட்­டும் பெரிய பொறுப்பை ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றார் இப்­ப­ரு­வம் முடி­யும் வரை நிர்­வா­கி­யாக இருக்­க­வுள்ள ரானிக். இவர் பொது­வாக அதி­கம் கேள்­விப்­ப­டாத விளை­யாட்­டா­ளர்­களை அடை­யா­ளம் கண்டு அவர்­களை நட்­சத்­தி­ரங்­க­ளாக உரு­வெ­டுக்­கச் செய்­பவர். யுனை­டெட் அணி­யிலோ நட்­சத்­திர பட்­டா­ளமே உள்­ளது. அவர்­க­ளைக் கையாள ரானிக் சிர­மப்­ப­ட­லாம். அதே வேளை­யில், ஓர் அணியை விறு­வி­றுப்­பா­க­வும் சுறு­சு­றுப்­பா­க­வும் விளை­யா­ட­வைப்­பதில் கைதேர்ந்­த­வர். மேலும், வருங்­கா­லத்­தில் ஓர் அணி சிறப்­பாக ஆடு­வ­தற்­கான மிகச் சிறப்­பான அடித்­த­ளத்­தைப் போடக்கூடியவர்.

பிரி­மி­யர் லீக்­கில் இன்று யுனை­டெட்டை முதன்­மு­றை­யாக கிரிஸ்­டல் பேல­ஸுக்கு எதி­ராக வழி­ந­டத்­து­வார் ரானிக். புதிய நிர்­வாகிக்கு அணியைச் சிறப்­பாக விளை­யா­ட­வைக்க கால அவ­கா­சம் தேவைப்­ப­ட­லாம். ஆனால் சோல்­ஷியா பத­வி­யில் இருந்த கடைசி சில வாரங்­களில் இவ்­வணி படு­மோ­ச­மா­கச் செய்­த­தால் ரன்­யிக் அவ்­வ­ளவு காலம் எடுத்­துக்­கொள்­ள­மு­டி­யாது. விமர்ச்­சிக்­கப் பல தரப்­பி­னர் ஆவ­லா­கக் காத்­தி­ருப்­பர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!