2வது டெஸ்ட்: நியூசிலாந்து அணிக்கு இமாலய இலக்கு

மும்பை: இந்­திய கிரிக்­கெட் அணிக்கு எதி­ரான இரண்­டா­வது டெஸ்ட் போட்­டி­யில் நியூ­சி­லாந்து அணி வெற்­றி­பெற 540 ஓட்­டங்­களை எடுத்­தாக வேண்­டும்.

இந்­தியா சென்­றுள்ள நியூ­சி­லாந்து அணி, அந்­நாட்டு அணி­யி­டம் 3-0 என்ற கணக்­கில் டி20 தொட­ரைப் பறி­கொ­டுத்­தது.

அத­னைத் தொடர்ந்து, இரண்டு போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்­கி­யது. கான்­பூ­ரில் நடந்த முதல் போட்டி வெற்றி தோல்­வி­யின்றி முடிந்­தது.

இந்­நி­லை­யில், கடந்த 3ஆம் தேதி மும்­பை­யில் 2வது டெஸ்ட் தொடங்­கி­யது.

இந்­திய அணி முதல் இன்­னிங்­சில் 325 ஓட்­டங்­க­ளை­யும் நியூ­சி­லாந்து அணி 62 ஓட்­டங்­களை­யும் எடுத்­தன. 200 ஓட்­டங்­களுக்­கு­மேல் முன்­னிலை பெற்­ற­போ­தும் 'ஃபாலோ ஆன்' தரா­மல் இந்­திய அணி 2வது இன்­னிங்­சில் பந்­த­டிக்­கத் தொடங்­கி­யது.

இரண்­டாம் நாள் முடி­வில் விக்­கெட் இழப்­பின்றி 69 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்த இந்­திய அணி, நேற்று ஏழு விக்­கெட் இழப்­பிற்கு 276 ஓட்­டங்­களை எடுத்த நிலை­யில் 2வது இன்­னிங்சை முடித்துக்­கொள்­வ­தாக அறி­வித்­தது.

முதல் இன்­னிங்­சில் சத­ம­டித்த மயங்க் அகர்­வால், 2வது இன்­னிங்­சில் 62 ஓட்­டங்­களை எடுத்­தார். அதே­போல, முதல் இன்­னிங்­சில் பத்து விக்­கெட்­டு­க­ளை­யும் வீழ்த்தி சாதனை படைத்த நியூ­சி­லாந்­தின் அஜாஸ் பட்­டேல், 2வது இன்­னிங்­சில் நான்கு விக்­கெட்­டு­க­ளைக் கைப்­பற்­றி­னார். ரச்­சின் ரவீந்­திரா மூவரை ஆட்­ட­மி­ழக்­கச் செய்­தார்.

இதனையடுத்து, 540 ஓட்­டங்­கள் எடுத்­தால் வெற்றி என்ற மாபெ­ரும் இலக்­கு­டன் 2வது இன்­னிங்­சைத் தொடங்­கிய நியூ­சி­லாந்து அணி நேற்று மூன்­றாம் நாள் ஆட்ட நேர முடி­வில் ஐந்து விக்­கெட் இழப்­பிற்கு 140 ஓட்­டங்­களை எடுத்­தி­ருந்­தது. ஐந்தில் மூன்று விக்கெட்டுகளை அஸ்வின் தனதாக்கிக்கொண்டார்.

இன்­னும் 400 ஓட்­டங்­களை எடுக்க வேண்­டி­யுள்ள நிலை­யில், ஐந்து விக்­கெட்­டு­களே எஞ்­சி­ இருப்­ப­தால் இன்று நான்­காம் நாளி­லேயே வெற்றி இந்­திய அணி­யின் கைகளில் தஞ்சமடையும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!