மேம்பட்ட அணி விடுக்கும் சவால்

சிங்­கப்­பூர்: தென்­கி­ழக்­கா­சி­யா­வின் தேசிய காற்­பந்து அணி­க­ளுக்­கான சுசுகி கிண்­ணப் போட்­டி­யில் ஐந்­தாண்­டு­களில் முதன்­மு­றை­யாக பிலிப்­பீன்சை வெல்­லும் இலக்­கைக் கொண்­டுள்­ளது சிங்­கப்­பூர். 'ஏ' பிரிவில் இரு அணி­களும் நாளை மோத­வுள்­ளன.

பொது­வா­கத் தென்­கி­ழக்­கா­சிய நாடு­களில் காற்­பந்­து­தான் மிகப் பிர­ப­லமான விளை­யாட்டு. கூடைப்­பந்து பிரி­யர்­கள் உள்ள பிலிப்­பீன்ஸ் அதற்கு விதி­வி­லக்கு. எனி­னும், கடந்த சில ஆண்­டு­க­ளாக அது­வும் காற்­பந்­தில் நல்ல தேர்ச்சி பெற்றுள்­ளது. 2010ஆம் ஆண்­டிலிருந்து சுசுகி கிண்ணப் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு நான்கு முறை முன்னேறியுள்ளது பிலிப்பீன்ஸ்.

கடந்த இரண்டு சுசுகி போட்­டி­களில் பிலிப்­பீன்ஸை வெல்­லத் தவறி­யுள்­ளது, இவ்­வாண்­டுப் போட்டியை ஏற்று நடத்­தும் சிங்­கப்­பூர். கடந்த மூன்று போட்­டி­களில் முதல் சுற்­றையும் தாண்­ட­வில்லை, தாய்­லாந்­துக்கு அடுத்­த­ப­டி­யாக கிண்­ணத்தை ஆக அதிக முறை வென்­றுள்ள இது. தனது முதல் ஆட்­டத்­தில் மியன்­மாரை 3-0 எனும் கோல் கணக்கில் வென்று தன்­னம்­பிக்கையை வர­வழைத்­துக்­கொண்­டது சிங்­கப்­பூர். பிலிப்­பீன்­சை­யும் வென்­றால் அரை­யி­று­திச் சுற்­றுக்­குச் செல்­வதற்­கான சிங்கப்பூரின் வாய்ப்­பு­கள் அதி­க­ரிக்­கும்.

"முதல் ஆட்­டத்­திற்­குப் பிறகு, மேலும் சிறப்­பாக விளை­யா­ட­மு­டி­யும் என்று எல்லா விளை­யாட்­டா­ளர்­களும் நம்­பு­கின்­ற­னர்," என்­றார் மியன்­மா­ருக்கு எதி­ரா­கச் சிறப்­பாக விளை­யா­டிய சிங்­கப்­பூ­ரின் சோங் உய்-யங்.

பிலிப்பீன்சுக்கு எதிராகக் கவனமாக ஆடவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார் சிங்கப்பூரின் பயிற்றுவிப்பாளர் டட்சுமா யோஷிடா. "மியன்மாருக்கு எதிரான ஆட்டத்திற்குப் பிறகு நாம் உடல்ரீதியாகவும் மனதளவிலும் மீண்டும் முழுமையாகத் தயாராய் இருக்கவேண்டும்," என்று யொஷிடா சுட்டினார்.

'ஏ' பிரி­வில் தாய்­லாந்­தும் இடம்­பெற்­றுள்­ளது. அதுவே சிங்கப்­பூர் வெல்­வதற்கு ஆகச் சிர­ம­மான அணி­யான அமை­ய­லாம்.

அத­னால் பிலிப்­பீன்ஸ், திமோர் லெஸ்டே ஆகிய அணி­களை வெல்­வது சிங்­கப்­பூருக்கு நல்­லது. சுசுகி போட்­டி­யில் ஐந்து முறை அரை­யி­று­திச் சுற்றுக்கு முன்­னே­றி­யுள்­ளது சிங்­கப்­பூர். அவற்­றில் நான்கு முறை இறுதி ஆட்­டத்­திற்­குச் சென்று கிண்­ணத்தை வென்று வந்­தது.

தென்­கி­ழக்­கா­சி­யா­வின் ஆகச் சிறந்த அணி­யா­கப் பல தரப்­பி­னர் தாய்­லாந்­தைக் கரு­து­வ­துண்டு. குறு­கிய காலத்­தில் அதற்கு நிக­ரா­கத் தன்னை வளர்த்­துக்­கொண்­டது சிங்­கப்­பூர். கடந்த ஒன்­பது ஆண்­டு­க­ளாக சற்று பின்­தங்­கியபோதும் சொந்த மண்­ணில் போட்­டி­யி­டு­வது இதற்­குப் புத்­து­யி­ரைத் தர­லாம்.

இன்­றி­ரவு எட்­டரை மணிக்கு சிங்­கப்­பூ­ரும் பிலிப்­பீன்­சும் சந்­திக்­க­வுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!