அடிமட்டத்தில் பார்சிலோனா

மியூ­னிக்: ஐரோப்­பிய சாம்­பி­யன்ஸ் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் 21 ஆண்­டு­களில் முதன்­மு­றைாக முதல் சுற்­றைத் தாண்­டத் தவ­றி­விட்­டது ஸ்பெ­யி­னின் பார்­சி­லோனா அணி. இப்­போட்­டி­யில் கிண்­ணத்தை எளி­தில் வெல்­லக்­கூ­டிய அணி என்று கடந்த சில ஆண்டு­களுக்­கு­முன்­கூட பல­ரால் கரு­தப்­பட்ட இவ்­வணி பெரிய அளவில் சரிந்­துள்­ளது.

'இ' பிரி­வி­லி­ருந்து இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னேற பார்­சி­லோனா ஜெர்­ம­னி­யின் பயர்ன் மியூ­னிக்கை வெல்­ல­வேண்­டி­யி­ருந்­தது. ஆனால் இறு­தி­யில் 3-0 எனும் கோல் கணக்­கில் பயர்ன் வென்றது. இத­னால் இப்­பி­ரி­வில் மூன்­றாம் இடத்தை மட்­டுமே பிடித்த பார்­சி­லோனா அடுத்த சுற்­றுக்­குத் தகு­தி­பெ­ற­வில்லை.

"இது­தான் எங்­க­ளின் தற்­போதைய நிலை. நான் கோப­மாக இருக்­கி­றேன். இது­தான் உண்மை, இந்­நிலை என்னை ஆத்­தி­ரப்­ப­டுத்து­கிறது. இதைத் தைரி­ய­மாக எதிர்­கொள்­ள­வேண்­டும். வேறு வழி­யில்லை," என்று பார்­சி­லோ­னாவின் புதிய பயிற்­று­விப்­பா­ள­ரான ஷாவி ஹெர்­னாண்­டெஸ் கூறி­னார்.

தனது பிரி­வில் மூன்­றா­வது இடத்­தில் வந்­த­தால் பார்­சி­லோனா இனி சாம்­பி­யன்ஸ் லீக்­கிற்கு அடுத்த நிலை­யில் உள்ள யூரோப்பா லீக் போட்­டி­யில் இடம்­பெ­றும். பிரி­வில் முதல் இரண்டு இடங்­க­ளைப் பிடிக்­கும் அணி­கள் மட்­டுமே சாம்­பி­யன்ஸ் லீக் போட்­டி­யின் இரண்­டாம் சுற்­றுக்­குச் செல்­லும்.

"புதிய தொடக்­கம் இன்று ஆரம்­பிக்­கட்­டும். பூஜ்­யத்­தி­லி­ருந்து தொடங்­க­வேண்­டும். சாம்­பி­யன்ஸ் லீக் கிண்­ணத்தை வெல்­வ­து­தான் நமது இலக்கு, யூரோப்பா லீக் கிண்­ணத்தை வெல்­வது அல்ல, ஆனால் இதுவே நமது தற்­போ­தைய நிலை என்­ப­தால் அக்­கிண்­ணத்தை வெல்ல முயற்­சி­செய்­ய­வேண்­டும்," என்­று முன்­னாள் பார்­சி­லோனா நட்­சத்­தி­ர­மு­மான ஷாவி சொன்­னார்.

இப்பிரிவில் பயர்ன் மியூனிக் முதலிடத்தைப் பிடிப்பது ஏற்கெனவே உறுதியான ஒன்று. மிகவும் அபாரமாக ஆடி பிரிவில் அனைத்து ஆட்டங்களையும் வென்றுள்ளது பயர்ன்.

ஸ்பா­னிய லீக்­கி­லும் பெரி­தும் சிர­மப்­பட்­டு­வ­ரு­கிறது பார்­சி­லோனா. எனி­னும், இதேபோல் 2003ஆம் ஆண்­டுக்கு முன்­பும் இவ்­வணி சரிவை எதிர்­கொண்­டது. அதற்­குப் பிற­கு­தான் மீண்­டும் அபா­ர­மான அணி­யாக உரு­வெ­டுத்­தது பார்­சி­லோனா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!