கிரிக்கெட்: இந்திய அணித் தலைவர் ரோகித்

மும்பை: ஒரு­நாள் கிரிக்­கெட் போட்­டி­களில் விராத் கோஹ்­லிக்­குப் பதி­லாக ரோகித் சர்­மாவை இந்­தி­யா­வின் அணித் தலை­வ­ரா­கத் தேர்ந்­தெ­டுத்­தது, தேசிய அணி­யைத் தேர்ந்­தெடுப்­போ­ரின் முடிவு என்­றும் இதில் 'பிசி­சிஐ' எனப்­படும் இந்­திய கிரிக்­கெட் கட்டுப்பாட்டு வாரி­யத்­தில் தலைமைப் பொறுப்பு வகிப்­ப­வர்­க­ளின் பங்கு ஏதும் இல்லை என்­றும் சில தகவல்கள் தெரிவித்துள்ளன. நேற்று முன்­தி­னம் வந்த அறி­விப்­பிற்கு முன்பு அணித் தலை­வர் பொறுப்­பி­லி­ருந்து வில­கு­மாறு 33 வயது கோஹ்லி கேட்­டுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­தி­யா­வின் டி20 அணித் தலை­வர் பொறுப்­பி­லி­ருந்து தான் வில­கப்­போ­வ­தாக கோஹ்லி சென்ற மாதம் அறி­வித்­தி­ருந்­தார். 20 ஓவர்­களில் ஆடப்­படும் டி20 கிரிக்­கெட் உல­கக் கிண்­ணப் போட்டி கடந்த செப்­டம்­பர் மாதம் நடை­பெற்­றது. அப்­போட்டி முடிந்­த­வு­டன் அணித் தலை­வர் பொறுப்­பி­லி­ருந்து வில­கிக்­கொள்­ளப்­போ­வ­தாக கோஹ்லி கூறி­யி­ருந்­தார். தனது சுமையை சீரா­கச் சமா­ளிக்­கும் நோக்­கு­டன் அந்த முடிவை எடுத்­த­தாக அவர் கூறி­னார். அத­னைத் தொடர்ந்து இப்­போது ஒரு­நாள் கிரிக்­கெட் போட்­டி­களில் அணித் தலை­வர் பொறுப்பு ரோகித்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது. ஒரு­நாள் கிரிக்­கெட்­டில் அணித் தலை­வர் பொறுப்­பைப் பங்­கு­போட்­டுக்­கொள்­ளும் சூழல் உரு­வா­கா­மல் பார்த்­துக்­கொள்­வதே இந்த முடி­வின் நோக்­கம் என்று சில தக­வல்­கள் தெரி­வித்­துள்­ளன.

டெஸ்ட் தொடர்­க­ளி­லும் அஜின்­கியா ரகானே­யி­ட­மி­ருந்து அணி­யின் துணைத் தலை­வர் பொறுப்­பை­யும் ரோகித் பெற்­றுக்­கொள்­வார். இம்­மா­தம் 26ஆம் தேதி முதல் தென்­னாப்­பி­ரிக்­கா­வு­டன் மூன்று டெஸ்ட் ஆட்­டங்­க­ளி­லும் மூன்று ஒரு­நாள் ஆட்­டங்­க­ளி­லும் இந்­தியா ஈடுபடும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!