லுக்காக்குவிற்கு அதிருப்தி

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் அணி­யான செல்­சி­யின் நிர்­வாகி தாமஸ் டூக்­க­லின் அணுகு­முறை தனக்கு அதி­ருப்தி அளிப்­ப­தாக ரொமெலு லுக்­காக்கு தெரி­வித்­துள்­ளார்.

"நிர்­வாகி (டுக்­கல்) எதிர்­பார்க்­காத ஓர் அணு­கு­மு­றை­யைப் பின்­பற்­று­கி­றார் என்று நினைக்­கி­றேன். இருந்­தா­லும் நான் விட்­டுக்­கொ­டுக்­கா­மல் உழைக்­க­வேண்­டும், எனது பணிக்கு நியா­ய­மாக இருக்­க­வேண்­டும். இந்த நிலைமை எனக்கு மகிழ்ச்சி தர­வில்லை, ஆனால் நான் கடி­ன­மாக உழைப்­ப­வன், விட்­டுக்­கொடுக்­கக்­கூ­டாது," என்று லுக்­காக்கு சொன்­னார்.

இந்­தப் பரு­வம் தொடங்­கு­வதற்கு முன் செல்சி, லுக்­காக்­குவை இத்­தா­லி­யின் இன்­டர் மிலா­னி­லி­ருந்து 97.5 மில்­லி­யன் பவுண்­டிற்கு வாங்­கி­யது. வாய்ப்பு கிடைத்­தால் ஒரு நாள் மறு­ப­டி­யும் இன்­ட­ரில் சேரும் எண்­ணம் கொண்­டுள்­ள­தாகவும் லுக்­காக்கு குறிப்பிட்டார்.

இதற்கு முன் ஒருமுறை செல்­சிக்கு ஆடிய லுக்­காக்கு, எவர்ட்­டன் மான்­செஸ்­டர் யுனை­டெட் ஆகிய அணி­க­ளுக்­கும் விளை­யா­டி­யி­ருக்­கி­றார். மிகச் சிறந்த முன்­னிலை ஆட்­டக்­கா­ர­ரான இவ­ருக்கு இது­போல் பிரச்­சி­னை­களும் அவ்­வப்­போது வரு­வ­துண்டு.

இந்­தப் பரு­வத்­தின் தொடக்­கத்­தில் அபா­ர­மாக ஆடி­ய லுக்­காக்கு, கடந்த சில வாரங்களாக சிரமப்படுகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!