சவால் தரக்கூடிய வூல்வ்ஸ்

மான்­செஸ்­டர்: புதிய நிர்­வா­கிக்­குக் கீழ் படிப்­ப­டி­யாக முன்­னேற்­றம் காட்டி­வ­ரும் மான்­செஸ்­டர் யுனை­டெட் காற்­பந்து அணி, அதி­ர­டி­யா­கக் கள­மி­றங்க ஆவ­லா­கக் காத்தி­ருக்­கின்­ற­னர் அதன் ரசி­கர்­கள். பழைய நிர்­வாகி ஒலே குனா சோல்­ஷி­யா­வின் தலை­மை­யில் சரிவை எதிர்­கொண்ட யுனை­டெட் பெரி­தும் மேம்­பட்­டுள்­ளது, இப்­போது கோல்­களை அதி­கம் விடு­வ­தில்லை. ஆனால், ரசி­கர்­களை உற்­சா­கப்­படுத்­து­வது என்­பது அடுத்த கட்­டம். அதை வூல்­வர்­ஹேம்ப்­டன் வாண்­ட­ரர்ஸுக்கு எதி­ராக செய்வது பெரும் சவா­லாக அமை­ய­லாம்.

இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக்­கில் இவ்­விரு அணி­களும் இன்று பின்­னி­ரவு மோத­வி­ருக்­கின்­றன. லீக் பட்­டி­ய­லில் யுனை­டெட் ஆறா­வது இடத்­தி­லும் வூல்வ்ஸ் ஏழா­வது இடத்­தி­லும் இருக்­கின்­றன.

முத­லி­டத்தை வகிக்­கும் நடப்பு வெற்­றி­யா­ளர் அணி­யான மான்­செஸ்­டர் சிட்­டிக்கு எதி­ரான ஆட்­டத்­தில் தப்­பாட்­டம் கார­ண­மாக தனது முக்­கி­ய­மான விளை­யாட்­டா­ளர் ரவுல் ஹிமெ­னெஸ் நீக்­கப்­பட்­ட­போ­தும். 1-0 எனும் கோல் கணக்­கில் மட்­டுமே தோல்­வி­ய­டைந்­தது வூல்வ்ஸ். இப்­ப­டிப்­பட்ட அணி­களை வென்று தனது ஆற்­றலை வெளிப்­ப­டுத்­த­வேண்­டிய நிலை­யில் யுனை­டெட் உள்­ளது.

கிரிஸ்­டி­யானோ ரொனால்டோ, புரூனோ ஃபெர்னாண்­டெஸ் ஆகி­யோரை மட்­டும் சார்ந்­தி­ரா­மல் தனது அணியை சிறப்­பாக ஆட­வைக்க முயல்­கி­றார் யுனை­டெட்­டின் புதிய நிர்­வாகி ரால்ஃப் ரானிக்.

“ரொனால்டோ, புரூனோ ஆகிய இரு­வ­ருக்­கும் இடை­யி­லான புரிந்­து­ணர்­வில் மட்­டும் கவ­னம் செலுத்தக்­க­கூ­டாது. இதர விளை­யாட்­டா­ளர்­க­ளி­ட­மும் நல்ல புரிந்­து­ணர்வு இருக்­க­வேண்­டும்,” என்று பர்ன்­லீக்கு எதி­ரான யுனை­டெட்­டின் சென்ற லீக் ஆட்­டத்­திற்­குப் பிறகு சொன்­னார் ரானிக். “ஒவ்­வோர் ஆட்­டத்­தி­லும் வெவ்­வேறு விளை­யாட்­டா­ளர்­கள் கள­மி­றக்­கப்­ப­டு­வர், அத­னால் இதர விளை­யாட்­டா­ளர்­களி­டையே நல்ல புரிந்­து­ணர்வை வளர்ப்­ப­தி­லும் குழு­வாக மேம்­ப­டு­வ­தி­லும் கவ­னம் செலுத்­த­வேண்­டும்,” என்­றும் ரானிக் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!