காற்பந்து உலகில் கிருமித்தொற்று

மெஸ்ஸிக்குக் கிருமித்தொற்று

பாரிஸ்: காற்பந்து நட்சத்திரம் லயனல் மெஸ்ஸிக்கு (படம்) கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அர்ஜென்டினாவைச் சேர்ந்த மெஸ்ஸிக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பதை அவர் விளையாடும் பிரெஞ்சு அணியான பிஎஸ்ஜி அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்தது. ஆகக் கடைசி நிலவரப்படி இவர் உட்பட பிஎஸ்ஜியில் நான்கு விளையாட்டாளர்கள் கிருமித்தொற்றுக்கு ஆளானதாக பிஎஸ்ஜி கூறியது. பாதிக்கப்பட்ட அனைவரும் சரியான விதிமுறைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்று அது சொன்னது.

நோயருக்கும் அதே நிலை

மியூனிக்: உலகின் தலைசிறந்த காற்பந்து அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஜெர்மனியின் பயர்ன் மியூனிக்கின் அணித் தலைவர் மேனுவெல் நோயருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் உட்பட பயர்னில் ஐவர் கிருமித்தொற்றுக்கு ஆளாயினர். அணியின் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான டினோ டொப்மொல்லர் அவர்களில் அடங்குவார். விளையாட்டாளர்களில் நோயரைத் தவிர கிங்ஸ்லீ கோமன், கொரென்டின் டடொலிசோ ஆகியோருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக காற்பந்து உலகில் பலரிடையே கிருமி பரவிவருகிறது. இங்கிலாந்தில் பல ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. கொள்ளைநோய்ப் பரவல் சூழல் எழுந்ததிலிருந்து பல பிரபலங்கள் இதற்கு ஆளாகிவிட்டனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!