நடுவர்களின் அணுகுமுறையால் கொதிக்கும் ஆர்சனல்

லண்­டன்: மான்­செஸ்­டர் சிட்­டி­யு­டன் தான் மோதிய இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் ஆட்­டத்­தில் நடு­வர்­கள் பார­பட்­சம் காண்­பித்­ததாக ஆர்­ச­னல் காற்­பந்து அணி குமு­று­கிறது. முற்­பாதி­யாட்­டத்­தில் ‘பெனாட்டி பாக்ஸ்’ எனச் சொல்­லப்­படும் வலைக்கு அருகே உள்ள பகு­தி­யில் ஆர்­ச­ன­லின் மார்ட்­டின் ஓட­கார்ட்டை சிட்டி கோல் காவ­லர் எடர்­சன் தடுக்­கி­விட்­டார். அது தப்­பாட்­டம் என வகைப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. சம்­ப­வத்தை அரங்­கில் உள்ள திரை­யில் பார்த்து முடிவை மறு­வு­று­திப் படுத்திக்கொள்ளுமாறு காணொளி உத­வி­யு­டன் செயல்­படும் ‘விஏ­ஆர்’ நடு­வர்­கள் ஆட்ட நடு­வ­ரி­டம் கூற­வில்லை.

எனி­னும், அத்­த­கைய சம்­ப­வம் சிட்­டிக்கு நிகழ்ந்­த­போது திரைக்­குச் சென்று முடி­வெ­டுக்­கு­மாறு ஆட்ட நடு­வர் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டார். அவர் முடிவை மாற்­றிக்­கொண்­ட­தால் சிட்­டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்­தது. அதைப் பயன்­படுத்­திக்­கொண்டு கோல் எண்­ணிக்­கையை சமப்­ப­டுத்­தி­யது சிட்டி.

“அந்­தத் தப்­பாட்­டத்­திற்கு பெனால்டி வழங்­கப்­ப­ட­வேண்­டி­ய­து­தான், ஆனால் பார­பட்­சம் தெரிந்­தது,” என்­றார் ஆர்­ச­ன­லின் துணை நிர்­வாகி ஆல்­பர்ட் ஸ்டி­யூ­வென்­பெர்க்.

“இரண்டு சம்­ப­வங்­க­ளை­யும் தப்­பாட்­டம் இல்லை என்று ஆட்ட நடு­வர் முத­லில் வகைப்­ப­டுத்­தி­னார். ஆனால் ஒரு சம்­ப­வத்­திற்கு மட்­டும் திரை­யில் பார்த்து தனது முடிவை மாற்­றிக்­கொண்­டார்,” என்று ஆர்­ச­னல் கோல் காவ­லர் ஏரன் ரேம்ஸ்­டேல் வருத்­தப்­பட்­டார்.

தப்­பாட்­டம் கார­ண­மாக பிற்­பா­தி­யில் ஆர்­ச­ன­லின் கேப்­ரி­யல் ஆட்­டத்­தி­லி­ருந்து நீக்­கப்­பட்­டார். 10 விளை­யாட்­டா­ளர்­க­ளு­டன் இறுதிவரை மனந்தளராமல் ஆடியது ஆர்­ச­னல். எனி­னும், கடைசி மூன்று நிமி­டங்­களில் வெற்றி கோலைப் போட்டு 2-1 எனும் கோல் கணக்­கில் வென்­றது சிட்டி.

ஆர்சனலின் இளம் வீரர்கள் ஏமாற்றமடைந்தனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!