வரலாறு படைக்க இந்தியா எண்ணம்

ஜோகன்னஸ்பர்க்: தென்­னாப்­பி­ரிக்­காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அதன் சொந்த மண்ணில் முதன்­மு­றை­யாக வெல்­லும் இலக்­கைக் கொண்­டுள்­ளது இந்­திய கிரிக்­கெட் அணி. இத்­தொ­ட­ரில் இரு அணி­களும் தங்­க­ளின் இரண்­டா­வது டெஸ்ட் ஆட்­டத்­தில் ஜோகன்னஸ்பர்க் நக­ரின் 'புல்­ரிங்' என்று செல்­ல­மாக அழைக்­கப்­படும் வாண்­ட­ரர்ஸ் அரங்­கில் மோத­வி­ருக்­கின்­றன.

தென்­னாப்­பி­ரிக்­கத் தலை­ந­கர் பிரிட்­டோ­ரி­யா­வின் செஞ்­சூ­ரி­யன் அரங்­கில் நடை­பெற்ற முதல் டெஸ்ட் ஆட்­டத்­தில் 113 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் இந்­தியா வென்­றது. அந்த அரங்­கில் தென்­னாப்­பி­ரிக்­காவை வென்ற முதல் ஆசிய அணி­யாக இந்­தியா திகழ்­கிறது. மேலும், இது­வரை அங்கு மூன்று ஆட்­டங்­களில் மட்­டுமே தோல்­வி­ய­டைந்­தி­ருக்­கிறது தென்­னாப்­பி­ரிக்கா.

தற்­போது சிறப்­பாக ஆடி­வ­ரும் இந்­தி­யா­வின் டெஸ்ட் அணிக்கு வாண்டரர்ஸ் அரங்­கில்­தான் நான்­காண்­டு­க­ளுக்கு முன்பு அடித்­த­ளம் அமைக்­கப்­பட்­டது என்று சொல்­லப்­ப­டு­வதுண்டு. உல­கைத் தங்­க­ளால் ஒரு கைபார்க்­க­மு­டி­யும் என்ற நம்­பிக்கை அப்­போதுதான் இந்­தி­யா­வுக்­குப் பிறந்­தது.

வாண்­ட­ரர்ஸ் அரங்­கில் டெஸ்ட் தொடரை வென்­றால் இந்­தி­யா­வின் வர­லாற்­றில் ஆகச் சிறந்த அணித் தலை­வர்­களில் விராத் கோஹ்லி ஒரு­வர் என்­பது உறு­தி­யா­கும் எனக் கரு­தப்­ப­டு­கிறது. கிரே­யம் சிமித்­தின் ஆணித்­த­ர­மாக செயல்­படும் தன்மை, ஹாஷிம் அம்­லா­வின் தனிச்­சி­றப்பு, தொடர்ந்து சிறப்­பாக ஆடக்கூடிய ஷாக் காலி­ஸின் ஆற்றல், டேல் ஸ்டை­யி­னின் அரிய திறமை, மோர்ன் மோர்க்­கெல்­லின் அதி­ரடி ஆட்­டம் ஆகி­யவை இப்­போது தென்­னாப்­பி­ரிக்காவில் இல்லை. அத­னால் கோஹ்லி தனது பெருமையை மறு­வு­று­திப்­ப­டுத்­திக்­கொள்ள இதுவே நல்ல தரு­ணம் என்ற எண்­ணம் நில­வு­கிறது. இந்த இந்­திய அணி­யு­டன் போட்­டி­யி­டு­வது தென்­னாப்­பி­ரிக்­கா­விற்கு சவா­லாக இருக்­க­லாம்.

அண்­மை­யில் குவின்­டன் டி கொக் 29 வய­தி­லேயே டெஸ்ட் கிரிக்­கெட்­டி­லி­ருந்து ஓய்­வு­பெற்­றார். மீண்­டும் சிறப்­பான அணி­யாக உரு­வெ­டுக்க தென்­னாப்­பி­ரிக்கா எதிர்­நோக்­கும் சவாலுக்கான அறி­கு­றி­யாக சிலர் இதைப் பார்க்­கின்­ற­னர்.

இத்­தொ­ட­ரின் இரண்­டா­வது டெஸ்ட் ஆட்­டம் சிங்­கப்­பூர் நேரப்­படி இன்று மாலை நான்கு மணிக்­குத் தொடங்­க­வுள்­ளது

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!