ஐபிஎல்: இரு பிரிவுகளாக மோதும் அணிகள்

மும்பை: இவ்­வாண்டு நடக்­க­வி­ருக்­கும் இந்­திய பிரி­மி­யர் லீக் (ஐபி­எல்) டி20 கிரிக்­கெட் போட்­டி­கள் புதிய முறைக்கு மாறு­கின்­றன.

பதி­னைந்­தா­வது முறை­யாக இடம்­பெ­றும் ஐபி­எல் போட்­டி­களில் இம்­முறை லக்னோ சூப்­பர் ஜயன்ட்ஸ், குஜ­ராத் டைட்­டன்ஸ் என இரு புதிய அணி­கள் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து, பங்­கேற்­கும் அணி­க­ளின் எண்­ணிக்கை பத்­தாக உயர்ந்­துள்­ளது.

இதற்­கு­முன் எட்டு அணி­கள் தங்­க­ளுக்­குள் தலா இரு­முறை மோத, ஒவ்­வோர் அணி­யும் மொத்­தம் 14 லீக் போட்­டி­களில் விளை­யா­டின.

இந்­நி­லை­யில், பிரி­வுக்கு ஐந்து என, பத்து அணி­களும் இரு பிரிவு­க­ளா­கப் பிரிக்­கப்­பட்­டுள்­ளன.

'ஏ' பிரி­வில் மும்பை இந்­தி­யன்ஸ், கோல்­கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்­தான் ராயல்ஸ், டெல்லி கேப்­பிட்­டல்ஸ், லக்னோ சூப்­பர் ஜயன்ட்ஸ் ஆகிய அணி­கள் இடம்­பெற்­றுள்­ளன. கடந்த முறை பட்­டம் வென்ற சென்னை சூப்­பர் கிங்­ஸ் உ­டன் சன்­ரை­சர்ஸ் ஹைத­ர­பாத், ராயல் சேலஞ்­சர்ஸ் பெங்­க­ளூரு, பஞ்­சாப் கிங்ஸ், குஜ­ராத் டைட்­டன்ஸ் ஆகிய அணி­கள் 'பி' பிரி­வில் இடம்­பி­டித்­துள்­ளன.

கடந்த ஐபி­எல் பரு­வங்­களில் வெளிப்­ப­டுத்­திய செயல்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் அணி­கள் தர­வ­ரி­சைப்­ப­டுத்­தப்­பட்டு, எப்­பி­ரி­வில் எந்த அணி­கள் இடம்­பெ­றும் என்­பது முடி­வு­செய்­யப்­பட்­டது.

அதா­வது, ஐந்து முறை பட்­டம் வென்ற மும்பை அணி 'ஏ' பிரி­விலும் நான்கு முறை பட்­டம் வென்ற சென்னை அணி 'பி' பிரி­வி­லும் முத­லாம் அணி­க­ளாக உள்­ளன. அது­போல, இரு­முறை பட்­டம் வென்ற கோல்­கத்தா அணி 'ஏ' பிரி­வி­லும் ஒரு­முறை பட்­டம் வென்ற ஹைத­ரா­பாத் அணி 'பி' பிரி­வி­லும் இரண்­டாம் அணி­க­ளாக இடம்­பெற்­றுள்­ளன. இந்த அடிப்­ப­டை­யில் மற்ற அணி­களும் பிரிக்­கப்­பட்­டன.

இம்­மு­றை­யும் எல்லா அணி­களும் லீக் சுற்­றில் தலா 14 போட்டி­களில் விளை­யா­டும்.

அதா­வது, ஒரே பிரி­வில் இடம்­பெற்­றுள்ள அணி­கள் தங்­க­ளுக்­குள் இரு­முறை மோதிக்­கொள்­ளும். இவ்­வ­கை­யில் அவை தலா எட்­டுப் போட்­டி­களில் விளை­யா­டும்.

அத்­து­டன், மற்­றொரு பிரி­வில் உள்ள நான்கு அணி­க­ளு­டன் ஒரு­மு­றை­யும் தனக்கு நிக­ரா­க­வுள்ள இன்­னோர் அணி­யு­டன் இரு­மு­றை­யும் மோதும்.

அதா­வது, 'பி' பிரி­வில் முதல் நிலை­யில் இருக்­கும் சென்னை அணி, 'ஏ' பிரி­வில் முதல்­நி­லை­யில் உள்ள மும்பை அணி­யு­டன் இரு போட்­டி­க­ளி­லும் 'ஏ' பிரி­வி­லுள்ள மற்ற அணி­க­ளு­டன் ஒரு­மு­றை­யும் மோதும்.

இந்த அடிப்­ப­டை­யில் மொத்­தம் 70 லீக் போட்­டி­கள் நடை­பெ­றும். இவற்­றில் 55 போட்­டி­கள் மும்பை நக­ரில் உள்ள மூன்று விளை­யாட்டு அரங்­கு­க­ளி­லும் எஞ்­சிய 15 போட்டி­கள் புனே நக­ரி­லும் நடை­பெ­றும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

'பிளே ஆஃப்' சுற்று ஆட்­டங்­கள் எங்கு நடை­பெ­றும் என்­பது பின்­னர் அறி­விக்­கப்­படும் என்று இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்டு வாரி­யம் தெரி­வித்­தது. வரும் மார்ச் 26 முதல் மே 29 வரை ஐபில் போட்­டி­கள் நடை­பெ­றவுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!