கிண்ணத்துக்குக் குறிவைக்கும் கிரிக்கெட் வீராங்கனைகள்

மவுண்ட் மவுன்­கானு: அனைத்­து­லக கிரிக்­கெட் மன்ற மக­ளிர் உலக கிண்ண கிரிக்­கெட் போட்டி (50 ஓவர்­கள்) நியூ­சி­லாந்­தில் இன்று தொடங்­கு­கிறது.

அடுத்த மாதம் 3ஆம் தேதி வரை இந்­தப் போட்டி நடை­பெ­றும்.இதில் நடப்பு வெற்­றி­யா­ளர் இங்­கி­லாந்து, இந்­தியா ஆஸ்­தி­ரே­லியா, நியூ­சி­லாந்து தென்­னாப்பி­ரிக்கா, பாகிஸ்­தான், வெஸ்ட் இண்­டீஸ், பங்­ளா­தேஷ் ஆகிய எட்டு நாடு­கள் பங்­கேற்­கின்­றன.

ஒவ்­வோர் அணி­யும் மற்ற அணி­க­ளு­டன் தலா ஒரு­முறை மோத வேண்­டும்.

அதன்­படி ஒவ்­வோர் அணி­யும் ஏழு ஆட்­டங்­களில் விளை­யா­டும்.

முதல் சுற்று முடி­வில் புள்­ளி­கள் அடிப்­ப­டை­யில் முதல் நான்கு இடங்­க­ளைப் பிடிக்­கும் அணி­கள் அரை இறு­திக்குத் தகுதி பெறும்.

இம்­மா­தம் 28ஆம் தேதி­யு­டன் முதல் சுற்று ஆட்­டங்­கள் நிறை­வு­பெ­றும். அரை­யி­றுதி ஆட்­டங்­கள் இம்­மா­தம் 30 மற்­றும் 31ஆம் தேதி­க­ளி­லும் இறு­திப்­போட்டி அடுத்த மாதம் 3ஆம் தேதி­யி­லும் நடை­பெ­றும்.

இன்­றைய தொடக்க ஆட்­டத்­தில் போட்­டியை நடத்­தும் நியூ­சி­லாந்து-வெஸ்ட் இண்­டீஸ் அணி­கள் மோது­கின்­றன.

சிங்­கப்­பூர் நேரப்­படி காலை

9 மணிக்­குப் போட்டி தொடங்­கு­கிறது.

இந்­திய மக­ளிர் அணி பத்­தா­வது முறை­யாக உலக கிண்­ணப் போட்­டி­யில் விளை­யா­டு­கிறது.

இதில் இரண்டு முறை இரண்­டா­வது இடத்தை (2005, 2017) இந்த மக­ளிர் அணி பிடித்­தது.

மித்தாலி ராஜ் தலை­மை­யி­லான இந்­திய அணி தொடக்க ஆட்­டத்­தில் பாகிஸ்­தானை நாளை மறு­நாள் எதிர்­கொள்­கிறது.

நியூ­சி­லாந்­து­டன் இம்­மா­தம் 10ஆம் தேதி­யி­லும் வெஸ்ட் இண்­டீ­சு­டன் 12ஆம் தேதி­யி­லும் இங்­கி­லாந்­து­டன் 16ஆம் தேதி­யி­லும் ஆஸ்­தி­ரே­லி­யா­வு­டன் 19ஆம் தேதி­யி­லும் பங்­ளா­தே­ஷு­டன் 22ஆம் தேதி­யி­லும் தென்­னாப்­பி­ரிக்­கா­வு­டன் 28ஆம் தேதி­யி­லும் இந்­தியா மோது­கிறது.

மக­ளிர் உலக கிண்ண கிரிக்­கெட் போட்டி 1973ஆம் ஆண்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. இது­வரை 11 போட்­டி­கள் நடந்­துள்­ளன.

கடை­சி­யாக 2017ஆம் ஆண்டு இங்­கி­லாந்­தில் இப்­போட்டி நடை­பெற்­றது.

ஆஸ்­தி­ரே­லியா அதி­க­பட்­ச­மாக ஆறு முறை கிண்­ணத்தை ஏந்­தி­உள்­ளது. அதற்கு அடுத்­தப­டி­யாக இங்­கி­லாந்து 4 முறை­யும் நியூ­சி­லாந்து ஒரு­மு­றை­யும் உலக கிண்­ணத்­தைக் கைப்­பற்­றி­யுள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!