காமன்வெல்த் போட்டியில் இந்திய பளுதூக்கும் வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
ஆண்கள் 73 கிலோ பிரிவில் 20 வயது அச்சிந்தா ஷுவெலி மொத்தமாக 313 கிலோ பளு தூக்கி தங்கம் வென்றுள்ளார். அவர் 'ஸ்னாட்ச்' பிரிவில் சாதனை அளவாக 143 கிலோ பளு தூக்கினார். மேலும்
'கிளீன் அண்ட் ஜெர்க்' பிரிவில் 170 பளு தூக்கி மொத்தமாக 313 கிலோவுடன் சாதனை படைத்துள்ளார் அச்சிந்தா.
அதே போல 67 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் 19 வயது ஜெரெமி லால்ரிங்கா தனது முதல் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டார். அவர் மொத்தம் 300 கிலோ பளு தூக்கி தங்கம் வென்றார்.
இந்தியாவின் சன்கெட் சார்கர் பளுதூக்குதலில் வெள்ளிப்பதக்கமும் குருராஜா பூஜாரி வெண்கலமும் வென்றனர்.