போராடி வென்ற ஆர்சனல்

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்­டி­யின் புதிய பரு­வம் நேற்று தொடங்­கி­யது. முதல் ஆட்­டத்­தில் ஆர்­ச­ன­லும் கிறிஸ்­டல் பேலும் மோதின. இதில் ஆர்­ச­னல் 2-0 எனும் கோல் கணக்­கில் போராடி வென்­றது.

மான்­செஸ்­டர் சிட்­டி­யி­லி­ருந்து விலகி ஆர்­ச­ன­லில் இணைந்த கேப்­ரி­யல் ஜேசுஸ், ஒலெக்­சாண்­டர் சின்­செங்கோ ஆகி­யோர் சிறப்­பாக விளை­யா­டி­னர்.

ஆர்­ச­னல் தாக்குதலில் தீவி­ரம் காட்ட, பேல­சின் பெனால்டி எல்­லைக்­குள் சின்­செங்கோ அனுப்­பிய பந்தை கேப்­ரி­யன் மார்ட்­டி­னேலி தலை­யால் முட்டி வலைக்­குள் சேர்த்­தார்.

இடை­வே­ளைக்கு முன்பு

ஆட்­டத்தைச் சமன் செய்ய பேல­சுக்கு பொன்­னான வாய்ப்பு கிடைத்­தது. ஆனால், ஒட்­சோன் எட்­வார்ட் தலை­யால் முட்­டிய பந்­தைப் பாய்ந்து தடுத்­தார் கோல்­காப்­பா­ளர் ஏரன் ரேம்ஸ்­டேல்.

பிற்­பாதி ஆட்­டத்­தி­லும் கோல் போட கிடைத்த வாய்ப்­பு­களை பேலஸ் நழு­வ­விட்­டது. இதற்கு ஆர்­ச­னல் கோல்­காப்­பா­ள­ரின் சாக­சங்­களும் விழிப்­பும் முக்­கிய கார­ணங்­க­ளாக அமைந்­தன.

எப்­ப­டி­யா­வது கோல் போட்டு ஆட்­டத்தைச் சமன் செய்ய வேண்­டும் என முனைப்­பு­டன் பேலஸ் ஆட்­டக்­கா­ரர்­கள் விளை­யா­டி­னர். கடைசி 15 நிமி­டங்­களில் தாக்­கு­த­லில் ஈடு­பட அனை­வ­ருக்கும் உத்­த­ர­விட்­டார் பேலஸ் நிர்­வாகி

பேட்­ரிக் வியேரா. இதைத் தனக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்தி திடீர் தாக்­கு­தல்­களில் ஆர்­ச­னல் ஈடு­பட்­டது. ஆட்­டத்­தின் 85வது நிமி­டத்­தில் ஆர்­ச­ன­லின் சாக்கா அனுப்­பிய பந்து பேல­சின் குவே­ஹி­யின் மீது பட்டு வலைக்­குள் சென்­றது. பேல­சின் இந்­தச் சொந்த கோல் ஆர்­ச­ன­லின் வெற்­றியை உறுதி செய்­தது. முதல் ஆட்­டத்­தி­லேயே ஆர்­ச­னல் வெற்றி பெற்று மூன்று புள்­ளி­க­ளைப் பெற்­றது. தோல்வி குறித்து வியேரா ஏமாற்­றம் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!