நடுவரின் சர்ச்சைக்குரிய முடிவு; இந்தியா தோல்வி

பிர்­மிங்­ஹம்: காமன்­வெல்த் போட்­டி­யில் மக­ளி­ருக்­கான ஹாக்கி

இறு­திச் சுற்­றுக்­குத் தகுதி பெறும் வாய்ப்பை இந்­திய அணி

தவ­ர­விட்­டது.

நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற அரை­யி­றுதி ஆட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யா­வு­டன் மோதிய இந்திய

மக­ளிர் அணி கடு­மை­யான போராட்­டத்­துக்­குப் பிறகு தோல்­வி­யின் பிடி­யில் சிக்­கி­யது.

ஆட்­டத்­தின் 16வது நிமி­டத்­தில் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் ரெபக்கா கிரை­னர் கோல் போட்டு ஆஸ்­தி­ரே­லி­யாவை முன்­னி­லைக்­குக் கொண்டு சென்­றார்.

பிற்­பாதி ஆட்­டத்­தில் 49வது நிமி­டத்­தில் இந்­தி­யா­வின் வந்­தனா கட்­டா­ரியா கோல் போட்டு ஆட்­டத்­தைச் சமன் செய்­தார்.

இரு அணி­களும் தரப்­புக்கு ஒரு கோல் போட்டுச் சம­நிலை கண்­டன. எனவே வெற்­றி­யா­ளரை நிர்­ண­யிக்க பெனால்டி முறை நடத்த வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது.

முதல் பெனால்டி முயற்­சி­யில் ஆஸ்­தி­ரே­லியா தோல்வி அடைந்­தது. ஆனால் நேரத்­தைப் பதிவு செய்­யும் கரு­வி­யைத் தொடங்கத் தவ­றியதாகக் கூறி ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு மீண்­டும் அந்த வாய்ப்பை நடு­வர் வழங்­கி­னார்.

இரண்­டா­வது வாய்ப்பை நன்கு பயன்­ப­டுத்தி பந்தை வலைக்­குள் ஆஸ்­தி­ரே­லியா அனுப்­பி­யது.

அதை­ய­டுத்து, ஆட்­டம் ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பக்­கம் சாய்ந்­தது.

ஒரு பெனால்டி வாய்ப்­பைக்­கூட இந்­தி­யா­வால் கோலாக மாற்ற முடி­யா­மல் போக 3-0 எனும் கோல் கணக்­கில் ஆஸ்­தி­ரே­லியா வெற்றி பெற்­றது. இறு­திச் சுற்­றுக்­குள் நுழைந்த ஆஸ்­தி­ரே­லியா, போட்­டியை ஏற்று நடத்­தும் இங்­கி­லாந்­தைச் சந்­திக்­கிறது. அரை­யி­றுதி ஆட்­டத்­தில் தோல்­வி­யைத் தழு­வி­னா­லும் இந்­திய ஹாக்கி மக­ளி­ரின் காமன்­வெல்த் பய­ணம் இன்­னும் முடி­ய­வில்லை.

அடுத்­த­தாக, வெண்­க­லத்­துக்­குக் குறி­வைத்து நியூ­சி­லாந்­துக்கு எதி­ரா­கக் கள­மி­றங்­கு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!