சமாளித்த செல்சி, தடுமாறிய லிவர்பூல்

புதிய இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் பருவத்தில் தனது முதல் ஆட்டத்தை 1-0 எனும் கோல் கணக்கில் வென்றுள்ளது செல்சி. 

எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் சுமாராக ஆடியபோதும் வெற்றிபெறுவதற்குத் தேவையான முயற்சியை செல்சி போட்டது.

மற்றோர் ஆட்டத்தில் எவர்ட்டனின் பரம வைரியான லிவர்பூலுக்கும் ஃபுல்ஹமுக்கும் இடையிலான ஆட்டம் 2-2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது.

ஆட்டத்தை லிவர்பூல் வெல்லும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

இருமுறை முன்னணிக்குச் சென்றது 'சேம்யின்ஷிப்' எனும் இங்கிலாந்து காற்பந்தின் இரண்டாம் தரப்பட்டியலிலிருந்து பிரிமியர் லீக்கிற்கு முன்னேறியுள்ள ஃபுல்ஹம்.

சென்ற பருவம் பிரிமியர் லீக் கிண்ணத்தைக் கிட்டத்தட்ட வென்ற லிவர்பூலை ஃபுல்ஹம் ஒருகை பார்த்தது.

80வது நிமிடத்தில் தனது அணியின் இரண்டாவது கோலைப் போட்டு கோல் ஆட்டத்தைச் சமப்படுத்தினார் லிவர்பூலின் மோ சாலா.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!