அசத்தலான அறிமுகம்

லண்­டன்: மான்­செஸ்­டர் சிட்­டிக்­காக முதன்­மு­த­லாக இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்­டி­யில் கள­மி­றங்­கிய எர்­லிங் ஹாலன் முதல் ஆட்­டத்­தி­லேயே இரண்டு கோல்­க­ளைப் போட்டு அசத்­தி­யுள்­ளார்.

அவர் போட்ட கோல்­கள் சிட்­டிக்கு வெற்­றி­யைத் தேடித் தந்­தது. வெஸ்ட் ஹேம் குழு­வுக்கு எதி­ராக நேற்று முன்­தி­னம் நடை­பெற்ற ஆட்­டத்­தில் சிட்டி 2-0 எனும் கோல் கணக்­கில் வாகை சூடி­யது.

ஆட்­டத்­தின் முற்­பா­தி­யில் பெனால்டி எல்­லை­யில் சிட்டி ஆட்­டக்­கா­ரரை வெஸ்ட் ஹேம் கோல்­காப்­பா­ளர் விழச் செய்­த­தால் சிட்­டிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்­தது.

இதைப் பயன்­ப­டுத்தி ஹாலன் கோல் போட்­டார்.

இடை­வே­ளை­யின்­போது 1-0 எனும் கோல் கணக்­கில் சிட்டி முன்­னிலை வகித்­தது.

ஆட்­டத்­தின் 65வது நிமி­டத்­தில் கோல் போட கிடைத்த பொன்­னான வாய்ப்பை ஹாலன் நழு­வ­வி­ட­வில்லை.

அவர் அனுப்­பிய பந்து வெஸ்ட் ஹேம் கோல்­காப்­பா­ள­ரைக் கடந்து சென்று வலை­யைத் தீண்­டி­யது. ஹாலன் சிறப்­பாக விளை­யா­டி­ய­தாக சிட்­டி­யின் நிர்­வாகி பெப் கார்­டி­யோலா பாராட்­டி­னார்.

எதிரணிக்கு அவர் சிம்ம சொப்பணமாக இருப்பார் என்று அவர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!