ஆர்சனலின் தொடர் வெற்றிகளுக்கு மேன்யூ கடும் சவால்

லண்­டன்: இப்­ப­ரு­வத்­தின் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­துப் போட்­டி­களில் இது­வரை தான் பங்­கேற்ற ஐந்து ஆட்­டங்­க­ளி­லும் வெற்­றிக்­க­னி­யைச் சுவைத்­துள்ள ஆர்­ச­னல் குழு, வேக­மாக முன்­னேறி வரும் மான்­செஸ்­டர் யுனை­டெட் குழு­வு­டன் இன்று மேன்­யூ­வின் சொந்தத் திட­லான ஓல்டு டிரா­ஃபோர்ட்­டில் மோத­வி­ருக்­கிறது.

பல­ரும் ஆவ­லு­டன் எதிர்­பார்த்­தி­ருக்­கும் இந்த ஆட்­டத்­தில் மான்­செஸ்­டர் சிட்டி குழு­வி­லி­ருந்து வந்து இப்­போது ஆர்­ச­னல் குழு­வுக்­காக அற்­பு­த­மாக ஆடிக்­கொண்­டி­ருக்­கும் பிரேசில் நட்­சத்­தி­ரம் கேபி­ரி­யல் ஜேசுஸ், மேன்­யூ­வுக்கு எதி­ராக கோல் போடு­வாரா அல்­லது மறு­மு­னை­யில் ஆர்­ச­னல் தற்­காப்பு அரணை உடைத்து மேன்­யூ­வின் ஜேடன் சாஞ்சோ கோல் போடு­வாரா என்­பது அனை­வ­ரின் எதிர்­பார்ப்­பாக உள்­ளது.

கடை­சி­யாக இந்த இரு குழுக்­களும் தாங்­கள் பங்­கேற்ற ஆட்­டங்­களில் வெற்றி பெற்­றன. லெஸ்­டர் சிட்டி குழுவை மேன்யூ 1-0 என்ற கோல் கணக்­கில் வென்­றது. அந்த ஆட்­டத்­தில் ஒரே வெற்றி கோலைப் போட்­ட­வர் சாஞ்சோ.

அதே­போல் ஆஸ்­டன் வில்லா குழுவை 2-1 என்ற கோல் கணக்­கில் ஆர்­ச­னல் வென்­றது.

இரண்டு தொடர் தோல்­வி­ களுக்­குப் பிறகு, லிவர்­பூல், சவுத்­ஹேம்­டன், லெஸ்­டர் ஆகிய குழுக்­களை வெற்றி கண்ட யுனை­டெட் நேற்­றி­ரவு 7.30 மணி நில­வ­ரப்­படி ஒன்­பது புள்­ளி­க­ளைப் பெற்­றுள்­ளது.

ஆர்­ச­னல் குழுவோ ஐந்து ஆட்ட வெற்­றி­க­ளுக்­குப் பிறகு 15 புள்­ளி­கள் பெற்று பட்­டி­ய­லில் முதல் இடத்­தில் உள்­ளது.

காற்­பந்து வர­லாற்று ஏடு­க­ளின் படி ஆர்­ச­னல் குழு 1947-48 காற்­பந்­துப் பரு­வத்­துக்­குப் பிறகு தொடர்ந்து ஆறு ஆட்­டங்­களில் வெற்றி பெற்­றது கிடை­யாது. அந்­தப் பரு­வத்­தில் ஆர்­ச­னல் லீக் விருதை வென்­றது என்­பது நினைவு­கூ­ரத்­தக்­கது.

மேன்யூவின் ஓல்டு டிரா­ஃபோர்ட்­ விளையாட்டரங்கம் ஆர்சனலுக்கு பொதுவாக மகிழ்ச்சி தரும் இடமாக அமைந்ததில்லை. மேன்யூவைச் சந்தித்த கடந்த 15 ஆட்டங்களில் ஆர்சனல் ஓர் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. அந்த நிலைமை மாறுமா அல்லது தொடருமா என்பது இன்று தெரிந்துவிடும்.

கோல் காவலர் டேவிட் டிகயா, தற்காப்பு ஆட்டக்காரர்கள் டலோட், வரேன், மார்டி னெஸ், மலாசியா ஆகியோ ரைக் கொண்ட மேன்யூவின் தற்போதைய தற்காப்பு அரண் வலுவாக இருப்ப தால், ஆர்சனலின் தாக்கு தல் ஆட்டக்காரர்கள் கூடுதல் உழைப்பை போட வேண்டி இருக்கும்.

சரியான ஆட்டக்காரர்களை வாங்கியதால், தற்போது பலம் கூடியிருக்கும் ஆர்சனலைத் தோற்கடிக்க வேண்டும் என் றால், மேன்யூ கடைசி வினாடி வரை கடுமையாக உழைக்க வேண்டும்.

இதைத்தான் மேன்யூவின் நிர்வாகி எரிக் டெக்ஹாக் அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். ஒவ்வோர் ஆட்டத்திலும் வெறித்தனத்துடன், விடாமுயற்சியுடன் விளையாட வேண்டும் என்பதில் அவர் உறுதி யாக இருக்கிறார்.

ஆர்சனலின் தற்காப்பு அரணை உடைக்க கிறிஸ்டியானோ ரொனால்டோ போன்ற மிகவும் அனுபவமிக்க ஆட்டக்காரர் தேவை என்பதால், டெக் ஹாக் அவரை களமிறக்கக்கூடும்.

புத்துயிர் பெற்றிருக்கும் மேன் யூவை அதன் சொந்தத் திடலில் எதிர்கொள்ள ஆர்சனலின் நிர்வாகி மிக்கெல் ஆர்டெட்டா பல உத்தி களை வைத்திருப்பார் என்பது திண் ணம்.

எது எப்படியோ ஓர் அற்புதமான காற்பந்தாட்ட விருந்து ரசிகர் களுக்கு காத்திருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!