சிங்கப்பூரில் களமிறங்கும் பொருசியா டோர்ட்மண்ட்

ஆ. விஷ்ணு வர்­தினி

ஜெர்­மன் காற்­பந்­துப் போட்­டி­களில் எட்டு முறை வாகை சூடிய பிர­பல பொரு­சியா டோர்ட்­மண்ட் காற்­பந்­துக் குழு, நட்­பு­முறை காற்­பந்து விளை­யாட்­டில் சிங்­கப்­பூ­ரின் லயன் சிட்டி செய்­லர்ஸ் குழு­வைச் சந்­திக்க இருக்­கிறது. அடுத்த மாதம் 24ஆம் தேதி­யன்று, ஜாலான் புசார் விளை­யாட்­ட­ரங்­கத்­தில் ஆட்­டம் நடை­பெ­றும்.

கடை­சி­யாக 2015ல் ரசி­கர்

களைக் காண சிங்­கப்­பூ­ருக்கு வந்­தி­ருந்­தது பொரு­சியா டோர்ட்­மண்ட். அடுத்த மாதம் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சிங்­கப்­பூ­ரில் பொரு­சியா டோர்ட்­மண்ட் குழு இருக்­கும். சிங்­கப்­பூர் காற்­பந்து ரசி­கர்­க­ளு­டன் அணுக்­க­மான தொடர்பை ஏற்­ப­டுத்­திக்­

கொள்ளவும் சமூக நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வும் அது திட்­ட­

மிட்­டுள்­ளது.

கத்­தா­ரில் நடை­பெ­ற­வி­ருக்­கும் உல­கக் கிண்ண காற்­பந்­துப் போட்­டி­யில் ஜெர்­ம­னிக்­கா­கக் கள­மி­றங்­கும் ஆட்­டக்­கா­ரர்­கள் இம்­முறை சிங்­கப்­பூ­ர் வராவிட்­டா­லும், அணி­யின் மற்ற பிர­பல விளை­யாட்­டா­ளர்­களை நேரில் சந்­திக்­கும் வாய்ப்­பு­கள் உண்டு.

இம்­மா­தம் 24ஆம் தேதி­வரை 15 விழுக்­காடு கழி­வு­ட­னான முதற்­கட்ட நுழை­வுச்­சீட்டு விற்­ப­னை­ நடக்­கும். https://www.sistic.com.sg/events/bvb1122 இணை­யத்­த­ளத்­தில் காற்­பந்து ரசி­கர்­கள் நுழை­வுச்­சீட்­டு­க­ளைப் பெற்­றுக்­கொள்­ள­லாம்.

ஐரோப்­பா­வின் சிறந்த காற்­பந்து குழுக்­களில் ஒன்­றான டோர்ட்­மண்ட்­டு­டன் மோது­வது லயன் சிட்டி செய்­லர்ஸ் வர­லாற்­றில் ஒரு முக்­கிய மைல்­கல்­லா­கும். டார்ட்­மண்ட் குழு­வி­ட­மி­ருந்து கற்­றுக்­கொண்டு தன்னை மேம்­ப­டுத்­திக்­கொள்­ளும் வாய்ப்பு லயன் சிட்டி செய்­லர்ஸ் குழு­வுக்­குக் கிடைத்­துள்­ளது.

"நீண்ட வர­லாறு கொண்ட டோர்ட்­மண்­டி­ட­மி­ருந்து விளை­யாட்டு நிர்­வா­கம் போன்­ற­வற்­றைக் கற்­றுக்­கொள்­ளும் அரிய வாய்ப்பு கிடைத்­துள்­ளது. ஐரோப்­பிய விளை­யாட்­டா­ளர்­க­ளு­டன் ஒப்­பிட்­டுப் பார்த்து முன்­னே­று­வ­தற்­கும் எங்­க­ளுக்கு இது பெரி­த­ள­வில் உத­வும்," என்­றார் லயன் சிட்டி செய்­லர்­சின் அணித் தலை­வர் ஹாரிஸ் ஹருண். எதிர்­வ­ரும் சிங்­கப்­பூர் கிண்­ணம் முத­லிய போட்­டி­களில் சிறப்­பாக விளை­யாடி தங்­க­ளைத் தொடர்ந்து மேம்­ப­டுத்­திக்­கொள்ள லயன் சிட்டி செய்­லர்ஸ் அணி முனை­வ­தா­க­வும் அவர் தமிழ் முர­சி­டம் கூறி­னார்.

பொரு­சியா டோர்ட்­மண்ட்-லயன் சிட்டி செய்­லர்ஸ் பங்காளித்

துவமானது, இளை­யர்­களை விளை­யாட்­டுக­ளின் பக்­கம் ஈர்க்­கும் குறிக்­கோ­ளைக் கொண்­டுள்­ள­தாக கூறி­னார் பிவிபி தென்­கி­ழக்­கா­சி­யா­வின் தலைமை நிர்­வாகி திரு சுரேஷ் லெட்­சு­ம­ணன்.

"இளமையில் கல்வியிலும் விளையாட்டுகளிலும் ஈடுபட வலி­யு­றுத்­த­வேண்­டும். முன்பெல்லாம் சிங்­கப்­பூர் காற்­பந்துக் குழு வலிமைமிக்கதாக இருந்தபோது அதில் பல இந்தியர்களும் இருந்தனர்.

"தற்போது இந்­திய இளை­யர்­

க­ளி­டத்­தில் தனித்திற­மை­யும் ஆர்­வ­மும் இருந்­தும் அவர்­களை காற்­பந்து விளை­யாட்­டா­ளர்­க­ளாக நம்­மால் வளர்த்­தெ­டுக்க முடி­ய­வில்லை.

"இதை மாற்­று­வ­தற்கு, காற்­பந்தை பிர­ப­லப்­ப­டுத்­து­வது ஒரு தொடக்­க­மாக இருக்­க­லாம்," என்­றார் திரு சுரேஷ் லெட்­சு­ம­ணன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!