மரடோனாவின் ‘கடவுளின் கை’ பந்து: ஏலத்தில் $4.81மி. வரை போகக்கூடும்

காலஞ்சென்ற அர்ஜெண்டின காற்பந்து வீரர் டியேகோ மரடோனா, 1986 உலகக் கிண்ணப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய கோல் போட பயன்படுத்தப்பட்ட பந்து அடுத்த மாதம் ஏலத்தில் விடப்படவுள்ளது.

அதில் அந்தப் பந்துக்கு £3 மில்லியன் (S$4.81மி.) வரை கோரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏலக் குத்தகை நவம்பர் 16ஆம் தேதி தொடங்கும். ஆனால் விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 28ஆம் தேதியிலிருந்து இணையத்தில் பதிவு செய்யலாம்.

“இந்தப் பந்துடன் தொடர்புடைய வரலாற்றைப் பார்க்கையில், ஏலத்தில் விடப்படும்போது இதற்கு அதிக விலை கோரப்படும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று ஏலத்தை நடத்தும் நிறுவனத் தலைவர் கிரஹம் பட் கூறினார்.

அந்த ஆட்டத்தில் 2-1 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டினா வென்றது. மரடோனாவின் சர்ச்சைக்குரிய கோல் செல்லுபடியாகும் என்று நடுவர் அலி பின் நாசர் கூறினார். 1986 உலகக் கிண்ணத்தை அர்ஜெண்டினாதான் வென்றது.

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!