பாகிஸ்தானுக்கு சிறு வாய்ப்பு

சிட்னி: ஆண்­கள் டி20 உல­கக் கிண்­ணத் தொட­ரில் 33 ஓட்­டங்­கள் வித்­தி­யா­சத்­தில் தென்­னாப்­பி­ரிக்­காவை வென்­றுள்­ளது பாகிஸ்­தான்.

இந்த 'சூப்­பர்-12' சுற்று இரண்­டாம் பிரிவு ஆட்­டத்­தில் முத­லில் பந்­த­டித்த பாகிஸ்­தான் ஒன்­பது விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 185 ஓட்­டங்­களை எடுத்­தது. நான்கு விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 48 ஓட்­டங்­களை மட்­டுமே எடுத்த பிறகு ஆட்­டத்­தில் நன்கு மேம்­பட்டு 185 ஓட்­டங்­க­ளைக் குவித்­தது பாகிஸ்­தான்.

அதற்­குப் பிறகு தென்­னாப்­பிரிக்கா பந்­த­டித்­த­போது மழை குறுக்­கிட்­ட­தால் 'டிஎல்­எஸ்' எனப்­படும் 'டக்­வொர்த்-லூயிஸ்- ஸ்டர்ன்' முறைப்­படி 14வது ஓவ­ரில் 33 ஓட்­டங்­கள் அதி­க­மாக எடுத்­த­தால் வெற்­றி­பெற்­றது பாகிஸ்­தான். ஒன்­பது விக்­கெட்­டு­கள் இழப்­பிற்கு 108 ஓட்­டங்­களை எடுத்­தது தென்­னாப்­பி­ரிக்கா.

36 பந்­து­களில் 82 ஓட்­டங்­க­ளைக் குவித்து அசத்­தி­யது ஷாடாப் கான், இஃப்டிக்­கார் அஹ்­மெத் ஆகி­யோ­ரைக் கொண்ட பாகிஸ்­தா­னிய இணை.

இந்த வெற்­றி­யைத் தொடர்ந்து அரை­யி­று­திச் சுற்­றுக்­குத் தகு­தி­பெ­றும் வாய்ப்­பைத் தக்­க­வைத்­துக்­கொண்­டுள்­ளது பாகிஸ்­தான். எனி­னும், வாய்ப்பு குறைவு.

'சூப்­பர்-12' சுற்று இரண்­டாம் பிரி­வில் இது­வரை ஆடிய நான்கு ஆட்­டங்­களில் பாகிஸ்­தான் இரண்­டில் வென்­றுள்­ளது. இரண்­டில் தோல்­வி­ய­டைந்­துள்­ளது.

பாகிஸ்­தான் அரை­யி­று­திச் சுற்றுக்கு முன்­னேற அதன் அடுத்த ஆட்­டத்­தில் பங்­ளா­தேஷை வெல்­ல­வேண்­டும். அதோடு, தென்­னாப்­பி­ரிக்கா நெதர்­லாந்தை வெல்­லாமல் இருக்­க­வேண்­டும் அல்­லது இந்­தியா ஸிம்­பாப்­வே­யி­டம் தோல்­வி­யடை­ய­வேண்­டும்.

பாகிஸ்தானை வென்­றி­ருந்­தால் தென்னாப்பிரிக்கா அரை­யி­று­திச் சுற்­றுக்கு முன்­னே­று­வது உறு­தி­யா­கி­யி­ரு­க்கும். இந்த ஆட்­டத்­திற்கு முன்பு இவ்வாண்டு டி20 உல­கக் கிண்­ணத் தொட­ரில் தோல்­வி­யடை­யா­மல் இருந்­தது தென்­னாப்­பிரிக்கா.

'சூப்­பர்-12' சுற்று இரண்­டாம் பிரி­வில் ஐந்து புள்­ளி­க­ளு­டன் இரண்­டாம் இடத்­தில் உள்­ளது தென்­னாப்­பி­ரிக்கா. நான்கு புள்ளி­க­ளைக் கொண்ட பாகிஸ்­தான் மூன்றாம் இடத்தை வகிக்­கிறது.

ஆறு புள்­ளி­க­ளு­டன் முத­லி­டத்­தில் உள்­ளது இந்­தியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!