வெற்றியின் அவசியத்தை உணர்ந்துள்ள லிவர்பூல்

லண்­டன்: கடந்த பருவ இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் பட்­டம் வெல்­வதில் மான்­செஸ்­டர் சிட்டி காற்­பந்­துக் குழு­விற்­குக் கடும் போட்டி அளித்த லிவர்­பூல் குழு, இம்­முறை தொடக்­கம் முதலே பின்­தங்கி இருக்­கிறது.

இப்­ப­ரு­வத்­தில் இது­வரை 12 ஆட்­டங்­களில் விளை­யா­டி­யுள்ள லிவர்­பூல், தலா நான்கு ஆட்­டங்­களில் வெற்­றி­யும் தோல்­வி­யும் சம­நி­லை­யும் கண்டு 16 புள்­ளி­களு­டன் பட்­டி­ய­லின் ஒன்­ப­தாம் இடத்­தில் உள்­ளது.

இந்­நி­லை­யில், தன்­னை­வி­டப் பத்­துப் புள்­ளி­கள் அதி­கம் பெற்று, பட்­டி­ய­லின் மூன்­றாம் நிலை­யில்­உள்ள டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பர் குழுவை அதன் சொந்த அரங்­கி­லேயே லிவர்­பூல் இன்று பின்­னி­ரவு எதிர்­கொள்ள இருக்­கிறது.

முதல் நான்கு இடங்­க­ளுக்­குள் வரு­வ­தற்­கான வாய்ப்பை உயிர்ப்­பு­டன் வைத்­தி­ருக்க வேண்­டு­ம் எ­னில் இன்­றைய ஆட்­டத்­தில் வெல்ல வேண்­டி­யது அவ­சி­யம் என்­பதை லிவர்­பூல் ஆட்­டக்­கா­ரர் டிரென்ட் அலெக்­சாண்­டர் ஆர்­னல்ட் ஒப்­புக்­கொண்­டார்.

நாப்­பொ­லிக்கு எதி­ரான சாம்­பி­யன்ஸ் லீக் ஆட்­டத்­தில் தலை­யில் காய­முற்ற ஜேம்ஸ் மில்­னர், ஸ்பர்­சுக்கு எதி­ரா­கக் கள­மி­றங்க மாட்­டார். ஆயி­னும், ஜேம்ஸ் ஹெண்­டர்­சன் நல்ல உடல்­த­கு­தி­யு­டன் இருப்­ப­தாக லிவர்­பூல் நிர்­வாகி யர்­கன் கிளோப் தெரி­வித்­தார்.

செல்­சிக்­குக் காத்­தி­ருக்­கும் சவால்

முன்­ன­தாக இன்­றி­ரவு நடக்­க­இருக்கும் ஆட்­டத்­தில் பட்­டி­ய­லின் முத­லி­டத்­தில் உள்ள ஆர்­ச­னல் குழுவை, தனது ஸ்டாம்­பர்ட் பிரிட்ஜ் அரங்­கில் எதிர்­கொள்ள இருக்­கிறது ஆறாம் நிலை­யி­ல் இருக்கும் செல்சி.

கடந்த செப்­டம்­ப­ரில் செல்சி நிர்­வா­கி­யா­கப் பொறுப்­பேற்­ற­பின் முதன்­மு­றை­யாக சென்ற வாரம் பிரைட்­ட­னி­டம் தோல்­வி­யின் சுவையை அறிந்­தார் கிர­காம் போட்­டர்.

முன்­னாள் ஆர்­ச­னல் வீர­ரான ஒப­மெ­யாங், இன்று செல்­சி­யின் தாக்­கு­தல் வரி­சைக்­குத் தலைமை வகிப்­பார் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!