பெரிய குழுக்களுக்கு எதிராக அசத்தும் லிவர்பூல்

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தில் பல ஆட்­டங்­களில் தடு­மா­றி­னா­லும் பெரிய குழுக்­க­ளுக்கு எதி­ராக சிறப்பாக ஆடும் உத்­தி­யைத் தெரிந்­து­வைத்­துள்­ளது லிவர்­பூல்.

சில வாரங்­க­ளுக்கு முன்பு லீக்­கி­ன் நடப்பு வெற்­றி­யா­ளர் குழு­வான மான்­செஸ்­டர் சிட்­டியை வென்ற லிவர்­பூல் அதற்­குப் பிறகு ஓர் ஆட்­டத்­தில் வென்­றது. எனி­னும், அந்த வெற்­றி­யைத் தொடர்ந்து அடுத்­த­டுத்த இரண்டு ஆட்­டங்­களில் யாரும் எதிர்­பாரா வகை­யில் தோல்­வி­ய­டைந்­தது.

லீக் பட்­டி­ய­லில் கடைசி இடத்­தில் உள்ள நாட்­டிங்­ஹம் ஃபாரஸ்ட்­டி­டம் கண்ட தோல்­வி­யும் அவற்­றில் அடங்­கும்.

அத்­த­கைய எதிர்­பாரா நிகழ்­வு­க­ளுக்­குப் பிறகு நேற்று முன்­தி­னம் டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பரை 2-1 எனும் கோல் கணக்­கில் வென்­றது லிவர்­பூல்.

குழு­வின் இரண்டு கோல்­க­ளை­யும் போட்­ட­வர் எகிப்து நட்­சத்­தி­ரம் மோ சாலா.

லீக் பட்­டி­ய­லில் தற்­போது எட்­டா­வது இடத்­தில் உள்­ளது லிவர்­பூல். இந்த வெற்றி இக்­கு­ழு­விற்­குப் புத்துயிர் அளிக்­கும் என்ற நம்­பிக்­கை­யு­டம் ஆவ­லு­டன் இருக்­கின்­ற­னர் லிவர்­பூல் ரசி­கர்­கள்.

தொடர் சரிவை எதிர்­கொண்ட ஸ்பர்ஸ் சென்ற வாரம் மீண்­டு­வ­ரும் அறி­கு­றி­கள் தென்­பட்­டன. மறு­வா­ரமே மீண்­டும் பழைய நிலை திரும்­பி­யுள்­ளது.

லீக் பட்­டி­ய­லில் பல வாரங்­க­ளாக ஸ்பர்ஸ் வகித்­து­வந்த மூன்­றா­வது இடத்­தை­யும் இப்­போது நியூ­கா­சல் யுனை­டெட் எடுத்­துக்­கொண்­டுள்­ளது.

குறிப்­பாக பெரிய குழுக்­க­ளைக் கையாள சிர­மப்­பட்டு வந்­துள்­ளது ஸ்பர்ஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!