உலகக் கிண்ணக் காற்பந்து: வெற்றியாளர்களைக் கணிக்கும் விலங்குகள்

உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்ட முடிவுகளைக் கணிக்க விலங்குகள் இல்லாத உலகக் கிண்ணப் போட்டியா?

உலகக் கிண்ணக் காற்பந்து ஆட்டங்களில் எந்த அணிகள் வெல்லும் என்பதை விலங்குகள் தேர்ந்தெடுப்பது அண்மைக் காலமாக வழக்கமாகிவிட்டது.

2010 உலகக் கிண்ணப் போட்டியில் தொடர்ச்சியாக எட்டு ஆட்டங்களில் வெற்றியாளர்களைச் சரியாக தேர்வுசெய்த பால் எனும் பெயர்கொண்ட ‘அக்டோபஸ்’ கடல் விலங்கினம் அந்தச் சமயத்தில் மிகவும் பிரபலமானது.

அந்த விலங்கினம் ஆட்ட முடிவுகளை சரியாக தேர்வுசெய்யும் என்ற நம்பிக்கை பலருக்கு ஏற்பட, ஆட்டங்களில் பந்தயம் கட்டவும் செய்தனர்.

அந்த வகையில், கத்தாரில் தற்போது நடைபெறும் உலகக் கிண்ணப் போட்டியில் ஜெர்மனியும் ஜப்பானும் மோதிய ‘இ’ பிரிவு ஆட்டத்தில் ஜப்பான்தான் வெல்லும் என்பதை சரியாகக் கணித்தது ‘டாயோ’ என்ற பெயரைக் கொண்ட நீர்நாய்.

மற்ற சில விலங்குகளும் இவ்வாறே வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. எனினும், அவற்றின் கணிப்பு சில வேளைகளில் சரியாக அமைவதில்லை.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!