அர்ஜெண்டினா உடனான ஆட்டத்தில் மோசமாக காயமுற்ற சவூதி வீரர்: ‘நான் நலமாக இருக்கிறேன்’ (காணொளி)

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் மோசமாகக் காயமுற்றார் சவூதி அரேபியாவின் யாசர் அல்-ஷஹ்ரானி. அதைத் தொடர்ந்து அவருக்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அந்த ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில் காயமுற்று பல நிமிடங்களுக்குத் திடலில் சிகிச்சை பெற்றார் 30 வயது அல்-ஷஹ்ரானி. முகத்தின் சில பகுதிகளில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதாகப் பின்னர் தெரிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து அல்-ஷஹ்ரானிக்கு அவசரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 

இந்நிலையில், தாம் நலமாக இருப்பதாக அவர் ரசிகர்களிடம் மறுவுறுதிப்படுத்தியுள்ளார்.

சிகிச்சைக்காக அல்-ஷஹ்ரானியை தனியார் விமானம் மூலம் ஜெர்மனிக்கு அழைத்துச்செல்ல சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் உத்தரவிட்டதாக ‘கல்ஃப் டுடே’ இணையத்தளம் தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!