உற்சாகமூட்டவரும் பிரேசில்

ேதாஹா: இவ்­வாண்­டின் உல­கக் கிண்­ணக் காற்பந்துப் போட்­டி­யில் இது­வரை ஆக விறு­வி­றுப்­பாக ஆடிய அணி என்­றால் அது பிரே­சில்­தான் என்­பது பல ரசி­கர்­க­ளின் கருத்­தாக இருக்­கும்.

'ஜி' பிரி­வில் செர்­பி­யா­வுக்கு எதி­ரான தனது முதல் ஆட்­டத்­தில் ரசி­கர்­களை எழுந்து ஆட வைத்­தது பிரே­சில். இன்று போட்­டி­யில் தனது இரண்­டா­வது ஆட்­டத்­தில் சுவிட்­சர்­லாந்­தைச் சந்­திக்­க­வுள்­ளது.

ஒரு காலத்­தில் காற்­பந்து சாக­சங்­களை என்­றுமே புரிந்­து­வந்த பிரே­சில் கடந்த சுமார் 20 ஆண்டு­களாக அணு­கு­மு­றையை மாற்­றிக்­கொண்­டது, ரசி­கர்­களை ஏங்­க­வைத்­தது. இப்­போது மீண்­டும் பழைய விறு­வி­றுப்பை முன்­வைக்கிறது.

செர்­பி­யா­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் இரண்டு கோல்­க­ளை­யும் போட்­டார் இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் குழு­வான டோட்­டன்­ஹம் ஹாட்ஸ்­பருக்கு அதி­கம் விளை­யா­டா­மல் இருக்­கும் ரிச்­சார்­லி­சன். எனி­னும், யாரும் காணா­தி­ருந்த தனது அபா­ர­மான மறு­பக்­கத்தை செர்­பி­யா­வுக்கு எதி­ரா­க பகிரங்கமாக்கினார் இவர்.

பந்­தைப் பெற்று காற்­றில் எம்பி இரண்­டா­வது கோலைப் போட்­டது (படம்) ரிச்­சார்­லி­ச­னின் மறைந்­திருந்த ஆற்­ற­லுக்­குச் சான்று. உல­கின் பார்­வை­யில் சிறப்­பாக விளை­யா­ட­வேண்­டிய கட்­டா­யத்­தில் இருக்­கும்­போது வாய்ப்­பைத் தன்­வ­சப்­படுத்­திக்­கொண்­டுள்­ளார் 25 வயது ரிச்­சார்­லி­சன்.

இனி போட்­டி­யில் தொடர்ந்து தன்­னம்­பிக்­கை­யு­டன் கள­மி­றங்­கு­வார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

ஆட்­டத்­தில் காய­முற்ற பிரே­சி­லின் நட்­சத்­திர ஆட்­டக்­கா­ரர் நெய்மார் இடம்­பெ­ற­மாட்­டார் என்று முன்­ன­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. எனி­னும், அவ­ரின் கணுக்­காலில் ஏற்­பட்ட வீக்­கம் குறைந்­தி­ருப்­பதாக சில தக­வல்­கள் வெளி­யாகி­யுள்­ளன. அது பிரே­சி­லுக்கு நற்­செய்­தி­யாக அமை­யும்.

முதல் ஆட்­டத்­தில் கேம­ரூனை வென்­றது சுவிட்­சர்­லாந்து. இந்த ஆட்­டத்­தில் பிரே­சிலை வெல்ல அந்த அணி சரி­யான உத்­தி­க­ளைப் பயன்­ப­டுத்­து­வது முக்­கி­யம்.

ஆட்­டத்­தில் சுவிட்­சர்­லாந்து வெல்ல வாய்ப்பு அதி­கம் இல்லை என்று பலர் நினைக்­கக்­கூ­டும். எதிர்­பாரா முடிவு வந்­தால் ஆச்­சரி­யம் ஒன்­றும் இல்லை. கார­ணம், இது உல­கக் கிண்­ணம்.

சில நாள்­க­ளுக்கு முன்­பு­தான் சவூதி அரே­பியா, அர்­ஜென்­டி­னாவை அதி­ர­வைத்­தது, ஜப்­பான் ஜெர்­ம­னியை அதிர்ச்­சிக்கு உள்­ளாக்­கி­யது. ஷர்­டான் ஷக்­கீரி போன்ற சில சிறப்­பான வீரர்­கள் சுவிட்­சர்­லாந்து அணி­யி­லும் உள்­ள­னர்.

இன்று நள்­ளி­ரவு 12 மணிக்கு பிரே­சி­லும் சுவிட்­சர்­லாந்­தும் மோது­கின்­றன.

இன்­றைய மற்­றொரு 'ஜி' பிரிவு ஆட்­டத்­தில் கேம­ரூ­னும் கானா­வும் சந்­திக்­க­வுள்­ளன. இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொள்ள இவ்விரு அணிகளும் வெல்வது நல்லது.

1990ஆம் ஆண்டுப் போட்டிக்குப் பிறகு கேமரூன் முதல் சுற்றைத் தாண்டியதில்லை. தனி நாடாகப் பிரிந்து வந்த பிறகு செர்பிய அணி இதற்கு முன்பு இருமுறை உலகக் கிண்ணப் போட்டிக்குத் தகுதிபெற்றது. ஆனால் ஒருமுறைகூட முதல் சுற்றைத் தாண்டவில்லை.

இன்று மாலை ஆறு மணிக்கு இவ்விரு அணிகளும் சந்திக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!