உலகக் கிண்ணம்: அதிர்ச்சியிலிருந்து மீண்டது அர்ஜெண்டினா

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் ‘சி’ பிரிவில் தனது முதல் ஆட்டத்தில் சவூதி அரேபியாவிடம் தோல்வியடைந்து அதிர்ச்சியடைந்த அர்ஜெண்டினா பலரைக் கவரும் வண்ணம் அந்நிகழ்வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

இன்று வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்ற போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் அர்ஜெண்டினா வென்றது.

மெக்சிகோவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்திலும் வெற்றிகண்டது.

போலந்துக்கு எதிரான ஆட்டத்தில் அர்ஜெண்டீனிய நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி ஒரு பெனால்டி வாய்ப்பை கோலாக்கத் தவறினார்.

அதையும் தாண்டி இரண்டு கோல்களைப் போட்டு வென்றது அர்ஜெண்டினா.

46வது நிமிடத்தில் அணியின் முதல் கோலைப் போட்டார் அலெக்சிஸ் மெக் ஆலிஸ்டர். இரண்டாவது கோலைப் போட்டவர் மான்செஸ்டர் சிட்டியின் இளம் நட்சத்திரம் ஜூலியன் அல்வாரெஸ். 

‘சி’ பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது அர்ஜெண்டினா. அதைத் தொடர்ந்து இரண்டாம் சுற்றில் ஆஸ்திரேலியாவைச் சந்திக்கும்.

அர்ஜெண்டினாவும் ஆஸ்திரேலியாவும் மோதவிருக்கும் இரண்டாம் சுற்று ஆட்டம் நாளை அல் ரயான் நகரில் நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!