பரபரப்பான ஆட்டங்கள், வண்ணமயமான ரசிகர்கள், சுவைமிகு பிரியாணி: ஆனந்த மழையில் சிங்கப்பூர் ரசிகர்கள்

உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை நேரில் காண கத்தார் சென்றுள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த ரசிகர்கள் தாங்கள் இன்ப அதிர்ச்சியில் திளைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

விதிமுறைகள் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்த்ததாகவும், அதற்கு மாறாக அங்குள்ள சூழல் தங்களை வரவேற்கும் வண்ணம் அமைந்துள்ளதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார் 33 வயது பீட்டர் ராஜ் (படத்தில் இடக்கோடியில் இருப்பவர்). 

வேலை கடப்பாடு காரணமாக 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியை நேரில் காண முடியாத குறை இப்போது தீர்ந்ததாக திரு ராஜ் குறிப்பிட்டார்.

"உலகக் கிண்ணப் போட்டியை நேரில் காண்பது என்பது என் கனவு," என்றார் அவர்.

கத்தாரின் பிரபலமான Souq Waqif எனும் பகுதியில் உள்ள பாரம்பரிய உணவகம் ஒன்றில் தாம் சாப்பிட்ட பிரியாணியே தாம் இதுவரை வாழ்நாளில் சுவைத்த ஆக சிறந்த பிரியாணி என்றார் அவர்.

இவரைப்போல் கத்தார் சென்றுள்ள மேலும் பல சிங்கப்பூரர்கள் தங்களின் சுவையான அனுபவங்களை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சுடன் பகிர்ந்துகொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!