அசத்தும் மாறுபட்ட இங்கிலாந்து

அல் கோர்: இதற்கு முன்பு நடை­பெற்ற உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­களில் தாக்­கு­தல் ஆட்­டத்­தில் அதிக கவ­னம் செலுத்­தா­மல் கோல் விடா­மல் பார்த்­துக்­கொள்­வ­தில்­தான் கண்­ணும் கருத்­து­மாக இருந்­தி­ருக்­கிறது இங்­கி­லாந்து. இவ்­வாண்­டின் போட்­டி­யில் அந்­தப் போக்கு மாறி­யுள்­ளது.

முதல் சுற்­றில் 'பி' பிரி­வில் இடம்­பெற்ற இங்­கி­லாந்து மூன்று ஆட்­டங்­களில் மொத்­தம் ஒன்­பது கோல்­க­ளைக் குவித்­தது. அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரான ஆட்­டம் மட்­டும் கோலின்றி சம­நி­லை­யில் முடிந்­தது.

முதல் சுற்­றில் காணப்­பட்­ட­தைப் போலவே இனி­வ­ரும் ஆட்­டங்­க­ளி­லும் அணி கவர்ச்­சி­யாக விளை­யா­டும் என்று நம்­பிக்கை கொண்­டுள்­ளார் முன்­னாள் இங்­கி­லாந்து நட்­சத்­தி­ரம் ஸ்டீவ் மெக்­மே­ன­மன்.

"அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரான ஆட்­டம் ஏமாற்­றத்­தைத் தந்­தது. ஆனால் பர­வா­யில்லை. அணி பிரச்­சி­னை­யின்றி சுமு­க­மாக இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யது. அணி கவர்ச்­சி­யாக விளை­யா­டும் என்று நான் நம்­பு­கி­றேன். கார­ணம், பல அபா­ர­மான விளை­யாட்­டாளர்­கள் அத­னி­டம் உள்­ள­னர்," என்­றார் மெக்­மே­ன­மன். நேற்று நடை­பெற்ற ஸ்டாண்­டர்ட் சார்ட்­டர்ட் நெடுந்­தொ­லை­வோட்ட நிகழ்ச்சி­யின்­போது அவர் ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­சி­டம் பேசி­னார்.

உல­கக் கிண்­ணப் போட்டி தொடங்­கு­வதற்கு முன்பு இங்கிலாந்து அடுத்தடுத்த ஆறு ஆட்­டங்­களில் வெல்­லா­தி­ருந்­தது. போட்டி தொடங்­கி­ய­தும் அந்­தக் கவ­லையை உத­றித் தள்­ளி­யது.

இங்­கி­லாந்து பயிற்­று­விப்­பா­ளர் கேரத் சவுத்­கேட் எதிர்­பார்ப்­பு­க­ளைப் பூர்த்­தி­செய்­ய­வில்லை என்று சில தரப்­பி­னர் கரு­து­கின்­ற­னர். ஆனால் அவரை முழுமையாக நம்புகிறார், அந்த காலத்­தில் இங்­கி­லாந்து அணி­யில் அவ­ரு­டன் விளை­யா­டிய மெக்­மே­ன­மன்.

போட்­டி­யின் இரண்­டாம் சுற்­றில் இன்று சென­க­லைச் சந்­திக்­கிறது இங்­கி­லாந்து. ஆட்­டத்­தில் தொடக்­கத்­தி­லி­ருந்து விளை­யா­டத் தனக்கு வாய்ப்பு இருப்­ப­தாகக் கருதுகிறார் மான்­செஸ்­டர் சிட்­டி­யின் நட்­சத்­தி­ரம் ஃபில் ஃபோடன்.

முதல் சுற்­றில் வேல்­சுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் கோல் போட்­டார் ஃபோடன்.

எனி­னும், இந்­தப் போட்டி இது­வரை தனக்கு இன்­பம், துன்­பம் இரண்­டை­யும் அளித்­தி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார். இது­வரை எல்லா ஆட்­டங்­க­ளி­லும் தொடக்­கத்­தி­லி­ருந்து விளையாடாதது குறித்து வருத்­தப்­பட்­டார் ஃபோடன். மார்க்­கஸ் ரேஷ்­ஃபர்ட். புக்­காயோ சாக்கா போன்ற இங்­கி­லாந்­தின் இதர தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ரர்­கள் போட்­டி­யில் சிறப்­பாக விளை­யா­டி­யி­ருப்­பதை 22 வயது ஃபோடன் சுட்­டி­னார்.

இங்­கி­லாந்­தின் அணித் தலை­வ­ரும் நட்­சத்­திர தாக்­கு­தல் ஆட்­டக்­கா­ர­ருமான ஹேரி கேன் இந்­தப் போட்டி­யில் இது­வரை கோல் போட­வில்லை. எனி­னும், அதைப் பற்­றித் தான் வருத்­தப்­ப­ட­வில்லை என்­றார் பயிற்று­விப்­பா­ளர் சவுத்­கேட்.

கேன் விரை­வில் கோல் போடு­வார் என்று நம்­பு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இந்த உல­கக் கிண்­ணப் போட்­டி­யில் பெல்­ஜி­ய­மும் ஜெர்­ம­னி­யும் முதல் சுற்­றி­லேயே வெளி­யே­றி­ய­தைக் கருத்­தில்­கொண்டு இங்­கி­லாந்து கவ­ன­மா­கச் செயல்­ப­ட­வேண்­டும் என்­றார் அணி­யின் நட்­சத்­திர தற்­காப்பு ஆட்­டக்­கா­ரர் ஜான் ஸ்டோன்ஸ்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!