இறுதி நொடிகளில் நிலவரத்தை மாற்றிய தென்கொரியா

தோஹா: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் 'எச்' பிரி­வில் கடைசி நொடி­களில் தன் தலை­யெழுத்தை மாற்­றிக்­கொண்­டது தென்­கொ­ரியா. போர்ச்­சு­க­லுக்கு எதி­ரான ஆட்­டத்­தின் கடைசி சில நிமி­டங்­களில் வெற்றி கோலைப் போட்டு தென்­கொ­ரியா இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யது.

ஆட்­டம் நிறை­வ­டை­யும் வரை மன­வு­று­தி­யு­டன் போராடி வெற்­றி­கண்­டது தென்­கொ­ரியா.

ஆட்­டம் தொடங்கி ஐந்தே நிமி­டங்­களில் போர்ச்­சு­கலை முன்­னுக்கு அனுப்­பி­னார் ரிக்­கார்டோ ஹோர்ட்டா. 27வது நிமி­டத்­தில் கோல் எண்­ணிக்­கையை சமப்­ப­டுத்­தி­னார் தென்­கொ­ரி­யா­வின் கிம் யங்-குவோன்.

கூடு­தல் நேரத்­தின் முதல் நிமி­டத்­தில் வெற்றி கோலைப் போட்­டார் தென்­கொ­ரிய வீரர் ஹுவாங் ஹீ-சான்.

'எச்' பிரி­வில் கானா­வுக்கு எதி­ரான ஆட்­டத்­தில் உரு­குவே 2-0 எனும் கோல் கணக்­கில் முன்­ன­ணி­யில் இருந்­தது. போர்ச்­சு­க­லும் தென்­கொ­ரி­யா­வும் மோதிய ஆட்­டம் 1-1 எனும் கோல் கணக்­கில் சம­நி­லை­யில் இருந்­த­தால் உரு­கு­வே­தான் அடுத்த சுற்­றுக்கு முன்­னே­றும் என்ற நிலை உரு­வெ­டுத்­தது. ஆனால், தென்­கொ­ரி­யா­வின் வெற்றி கோல் நிலை­மை­யைப் புரட்­டிப்­போட்­டது.

தென்­கொ­ரி­யா­வின் இரண்­டா­வது கோல் விழுந்த பிறகு உரு­குவே அடுத்த சுற்­றுக்கு முன்­னேற அதன் ஆட்­டத்­தில் மேலும் ஒரு கோலைப் போட­வேண்­டி­யி­ருந்­தது.

தென்­கொ­ரியா இரண்­டா­வது கோலைப் போட்­டது தெரி­ய­வந்­த­போது உரு­கு­வே­யும் கானா­வும் மோதிய ஆட்­டத்­தில் சுமார் 10 நிமி­டங்­களே எஞ்­சி­யி­ருந்­தன. ஆட்­டத்­தின் மூன்­றா­வது கோலைப் போடும் முயற்­சி­யில் தீவி­ர­மாக இறங்­கி­யது உருகுவே. ஆனால் பல­னில்­லா­மல் போனது. இரு ஆட்­டங்­களும் ஒரே நேரத்­தில் தொடங்­கின.

முன்­ன­தாக போட்­டி­யின் ஆகச் சவா­லான பிரி­வி­லி­ருந்து மற்­றோர் ஆசிய அணி­யான ஜப்­பான் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யது. ஆசி­யா­வைப் பிர­திநி­தித்து ஓர் அணி மட்­டும்­தான் அடுத்த சுற்­றில் இடம்­பெ­றும் என்ற நிலைக்கு ரசி­கர்­கள் தங்­களை மனத்­த­ள­வில் தயார்ப்­படுத்­திக் கொண்­டி­ருந்த வேளை­யில் தென்­கொ­ரியா இன்ப அதிர்ச்சி தந்­தது.

12 ஆண்­டு­கள் இடை­வெ­ளிக்­குப் பிறகு மீண்­டும் உல­கக் கிண்­ணப் போட்­டி­யின் இரண்­டாம் சுற்­றுக்கு முன்­னே­றி­யுள்­ளது, உல­கக் கிண்ண வர­லாற்­றில் அரை­யி­று­திச் சுற்­று­வரை சென்ற ஒரே ஆசிய அணி­யான தென்­கொ­ரியா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!