ஜப்பான்: எங்களுக்குப் பெரும் வாய்ப்பு

தோஹா: உல­கக் கிண்ணக் காற்பந்துப் போட்­டி­யில் லீக் சுற்­று­கள் முடிந்து 16 அணி­கள் கலந்­து­கொள்ளும் காலி­று­திக்கு முந்­திய சுற்று போட்­டி­கள் தொடங்­கின­.

இது­வ­ரை­யில் சனிக்­கி­ழமை நில­வ­ரப்­படி நெதர்­லாந்து, அர்­ஜெண்டினா இரண்டு அணி­களும் காலி­றுதிச் சுற்­றுக்கு முன்­னேறி இருக்­கின்­றன.

பிரான்ஸ்-போலந்து அணி­களும் இங்­கி­லாந்து-சென­கல் அணி­களும் நேற்று இரவு 11 மணிக்­கும் இன்று அதி­காலை 3 மணிக்­கும் மோதின.

இந்த நிலை­யில், இன்று இரவு 11 மணிக்கு ஜப்­பா­னும் குரோ­வே­ஷி­யா­வும் விளை­யா­ட­வி­ருக்­கின்­றன.

இதற்­கி­டையே, சனிக்­கி­ழமை ஜப்­பா­னிய அணி­யி­னர் கடு­மை­யான பயிற்­சி­யில் ஈடு­பட்­ட­னர்.

குரோ­வே­ஷியா அணி­யு­டன் நடக்­க­வி­ருக்­கும் மோதலைத் தாங்கள் ஆவ­லு­டன் எதிர்­பார்ப்­பதாக அப்­போது ஜப்­பா­னிய வீரர்­களில் பல­ரும் தெரி­வித்­தனர்.

"அது எங்­க­ளுக்குப் பெரும் வாய்ப்பு. வர­லாறு படைப்­ப­தற்கு மாபெ­ரும் வாய்ப்­பாக அது எங்­களுக்குக் கிடைக்­கிறது. கடைசி மூன்று போட்­டி­க­ளுக்­குப் பிறகு எங்­க­ளுக்கு இமா­லய நம்­பிக்கை ஏற்­பட்டு இருக்­கிறது," என்று கோல்­கீப்­பர் கவா­ஷிமா கூறி­னார்.

காலி­றுதிப் போட்­டி­யில் விளை­யா­டு­வது எங்­கள் இலக்கு என்று டோமி­யாஷு என்ற வீரர் கூறி­னார்.

உல­கக் கிண்ணக் காற்­பந்துப் போட்­டி­யில் இது­வரை செய்­யாத சாத­னையை இந்­தப் போட்­டி­யில் ஜப்­பான் நிகழ்த்த வேண்­டும் என்பதே எங்­கள் இலக்கு என்று தலை­மைப் பயிற்­று­விப்­பா­ள­ரான மோரி­யாஷு ஏற்­கெ­னவே தெரி­வித்து இருக்­கி­றார்.

உல­கக் கிண்­ணக் காற்­பந்துப் போட்­டி­களில் ஜப்­பான்-குரோ­வே­ஷியா அணி­கள் இப்­போது மூன்­றா­வது முறை­யாக மோது­கின்­றன.

இதற்கு முன் அந்த அணி­கள் 2006ஆம் ஆண்­டி­லும் 1998ஆம் ஆண்­டி­லும் மோதின.

எப்­ப­டி­யா­வது காலி­றுதிப் போட்டிக்­குள் நுழைந்து வர­லாறு படைக்க வேண்­டும் என்று இப்­போது ஜப்பான் கங்­க­ணம் கட்­டிக்­கொண்டு இருக்­கிறது.

குரோ­வே­ஷியா ஏற்­கெ­னவே ஒன்­றுக்கு மேற்­பட்ட முறை அரை­யி­று­தி­யில் நுழைந்து இருக்­கிறது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

ஜப்­பா­னின் இலக்கு நிறை­வேறும் என்ற நம்­பிக்­கை­யு­டன் அந்த நாட்டு ரசி­கர்­கள் மிக ஆவ­லு­டன் இருக்­கி­றார்­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!