வேன் டைக், மெஸ்ஸி நேருக்கு நேர்

லுசாய்ல்: உல­கக் கிண்­ணக் காற்­பந்­துப் போட்­டி­யின் அரை­யி­று­திச் சுற்­றில் உல­கின் தலை­சி­றந்த தற்­காப்பு வீர­ரா­கக் கரு­தப்­படும் வெர்­ஜில் வேன் டைக், உல­கின் ஆகச் சிறந்த விளையாட்டாளராகப் போற்­றப்­படும் லய­னல் மெஸ்ஸி இரு­வரும் நேருக்கு நேர் மோத­வுள்­ள­னர். வேன் டைக்­கின் நெதர்­லாந்­தும் மெஸ்ஸியின் அர்­ஜென்­டினாவும் காலிறுதிச் சுற்றில் இன்று சந்­திக்­கின்­றன.

இது, காற்­பந்து ரசி­கர்­கள் மிக­வும் ஆவ­லாக எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கும் தருணம். எனி­னும், இந்த ஆட்­டம் தங்­க­ளுக்­கி­டை­யி­லான மோதல் மட்­டும் இல்லை என்­று கூறியுள்ளார் நெதர்­லாந்து அணித் தலை­வரான வேன் டைக்.

“இது எனக்­கும் மெஸ்­ஸிக்­கும் அல்­லது நெதர்­லாந்­துக்­கும் மெஸ்­ஸிக்­கும் இடை­யில் நடை­பெ­றும் ஆட்­டம் அல்ல. இது நெதர்­லாந்துக்­கும் அர்­ஜென்­டி­னா­வுக்­கும் இடை­யி­லான ஆட்­டம்,” என்று குறிப்­பிட்­டார் வேன் டைக்.

உல­கின் தலை­சி­றந்த காற்­பந்து வீரர் விருதை ஆக அதிகமாக ஏழு முறை வென்ற மெஸ்­ஸிக்கு எதி­ராக மோது­வது அச்­சம் வர­வ­ழைக்­கும் நிகழ்வா என்று செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் வேன் டைக்­கி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது. அதற்­குப் பதி­ல­ளித்த அவர், தங்­க­ளுக்கு அச்­சம் இல்லை என்­றும் திட­லில் அர்­ஜென்­டினா விடுக்­கக்­கூ­டிய மிரட்­டல் குறித்து கவ­ன­த்துடன் மட்டும் இருப்­ப­த­ாகத் தெரி­வித்­தார்.

இந்த உல­கக் கிண்­ணப் போட்டி­யில் இது­வரை சிறப்­பாக விளை­யாடி வந்­துள்­ளார் மெஸ்ஸி. குறிப்­பாக மெக்­சிகோ, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய அணி­கள் அவ­ரைக் கையாள முடி­யா­மல் தவித்­தன.

2014ஆம் ஆண்­டுப் போட்­டி­யின் அரை­யி­று­திச் சுற்­றில் இவ்­விரு அணி­க­ளும் சந்­தித்­தன. அதில் அர்­ஜென்­டினா வென்­றது.

1998ஆம் ஆண்­டுப் போட்­டி­யின் அரை­யி­று­திச் சுற்­றி­லும் இரு அணி­களும் மோதின. அதில் வெற்றி கண்­டது நெதர்­லாந்து.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!