சொந்த கோலால் நொந்துபோனார்!

பெர்லின்: ஜெர்மன் கிண்ண காற்பந்துப் போட்டியில் விளையாடும் விஎஃப்பி ஸ்டுட்கார்ட் குழுவின் கொன்ஸ்டான்டினோஸ் மாவ்ரோபானோஸ் வேண்டாத சாதனை படைத்துள்ளார். 

அவர் 48 மீட்டர் தூரத்திலிருந்து தமது அணி கோல்காப்பாளரை நோக்கி பந்தை அனுப்பினார். ஆனால், அவர் அனுப்பிய பந்து நேராக வலைக்குள் சென்றது. அவரிடமிருந்து பந்து வந்ததைச் சற்றும் எதிர்பார்க்காத கோல்காப்பாளர் கடைசி நேரத்தில் பந்தைத் தடுக்க முயன்று, தோற்றார். 

இவ்வளவு தொலைவிலிருந்து அனுப்பப்பட்ட பந்து வலைக்குள் புகுந்து சொந்த கோலானதை அடுத்து, அது சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுவிட்டது.

ஆட்டத்தின் தொடக்கத்தில் போடப்பட்ட இந்தச் சொந்த கோல் காரணமாக ஸ்டுட்கார்ட் குழுவுக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும், மனந்தளராமல் போராடிய அக்குழு ஆட்டத்தின் கடைசிகட்டத்தில் இரண்டு கோல்களைப் போட்டு இரண்டாம் நிலை லீக் குழுவான பெடர்போர்னைத் தோற்கடித்து, காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!