இந்தியா-நியூசிலாந்து ஆட்டத்தில் பெக்கம்

1 mins read
35dc06ba-049f-4f1f-b767-98a0cd692e82
இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய உலகக் கிண்ண அரையிறுதியாட்டம் நடைபெறுவதற்கு முன்பு திடலுக்கு வந்த டேவிட் பெக்கம் (வலது), சச்சின் டெண்டுல்கர். - படம்: ஏஎஃப்பி

மும்பை: இவ்வாண்டின் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய அரையிறுதியாட்டம் நடைபெற்ற விளையாட்டரங்கில் காணப்பட்டார் முன்னாள் காற்பந்து நட்சத்திரம் டேவிட் பெக்கம்.

மும்பையின் வான்கடே விளையாட்டரங்கில் அரங்கேறிய ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு இந்தியாவின் கிரிக்கெட் சகாப்தம் சச்சின் டெண்டுல்கருடன் திடலுக்கு வந்தார் பெக்கம். அவரை இந்திய அணியின் விளையாட்டாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார் சச்சின்.

அதற்குப் பிறகு இருவரும் தங்களின் இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தைக் கண்டு களித்தனர்.

ஐக்கிய நாட்டு நிறுவன சிறுவர் பாதுகாப்பு அமைப்பின் (யூனுசெஃப்) தூதரான பெக்கம், கடந்த சில நாள்களாக இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்தார். ஆட்டத்தைக் காண அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி) அவருக்கு அழைப்பு விடுத்திருந்தது.

கிரிக்கெட் மூலம் பெண்களையும் சிறுவர்களையும் மேம்படச் செய்வதற்கான திட்டத்தை ஐசிசி, யூனிசெஃபுடன் இணைந்து நடத்துகிறது.

குறிப்புச் சொற்கள்