ஸ்பர்ஸ் கோல் காப்பாளரைப் பாராட்டிய நிர்வாகி

ஸ்பர்ஸ் கோல் காப்பாளரைப் பாராட்டிய நிர்வாகி

1 mins read
cb3552b9-cf6a-407a-9649-83a8b0719d11
எவர்ட்டனுக்கு எதிரான ஆட்டத்தில் கோல் விழுவிதைத் தடுக்கும் ஸ்பர்ஸ் கோல் காப்பாளர் விக்காரியோ குக்லியெல்மோ. - படம்: ஏஎஃப்பி
Google News Preferred Icon

லண்டன்: இங்கிலி‌ஷ் பிரிமியர் லிக் காற்பந்தாட்டத்தில் எவர்ட்டனை 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்.

ஸ்பர்சுக்கு ரிச்சார்லிசன், சொன் ஹியோங் மின் ஆகியோர் கோல்களைப் போட்டனர். ஆண்ட்ரே கொமெஸ் எவர்ட்டனுக்கு கோல் போட்டார்.

இந்த ஆட்டத்தில் ஸ்பர்ஸ் கோல் காப்பாளர் விக்காரியோ குக்லியெல்மோவின் விளையாட்டைப் பாராட்டினார் அக்குழுவின் நிர்வாகி ஏஞ்சி பொஸ்டெக்கொக்லு. குறிப்பாக பிற்பாதியாட்டத்தில் எவர்ட்டனின் பல கோல் வாய்ப்புகளை குக்லியெல்மோ தடுத்தார்.

ஸ்பர்ஸ் 2-0 எனும் கோல் கணக்கில் முன்னணி வகித்தபோது ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ஆண்ட்ரே கொமெஸ் எவர்ட்டனுக்கு கோல் போட்டார். அதற்குப் பிறகு கோல் எண்ணிக்கையைச் சமப்படுத்த எவர்ட்டனுக்குக் கிடைத்த நல்ல கோல் வாய்ப்பை முறியடித்தார் குக்லியெல்மோ.

“கோல்களைத் தடுத்தது மட்டுமல்லாமல் கோர்னர் வாய்ப்புகளை அவர் கையாண்ட விதமும் சிறப்பாக இருந்தது. அவர்கள் (எவர்ட்டன்) கோல் காப்பாளருக்கு அதிக நெருக்குதல் தந்தனர்.

“அவர் கோல்களைத் தடுப்பதில் சிறந்தவர். பல ஆட்டங்களில் வெவ்வேறு தற்காப்பு வீரர்களுடன் விளையாடுகிறார். அப்படியிருந்தும் குழுவுக்கு உதவக்கூடிய அனுபவம் அவரிடம் உள்ளது,” என்றார் பொஸ்டெக்கொக்லு.

குறிப்புச் சொற்கள்