இலங்கையை மீட்ட லியனாக

கொழும்பு: ஸிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டியில் சிரமப்பட்டுக்கொண்டிருந்த இலங்கை அணியை மீட்டார் ஜனித் லியனாக.

முதலில் பந்தடித்த ஸிம்பாப்வே, 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 208 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இலங்கைக்கான வெற்றி இலக்கு 209 ஓட்டங்களாக இருந்தது.

வெற்றி இலக்கு குறைவாக இருந்தபோதும் இலங்கை அணி 112 ஓட்டங்களுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தது. ஆனால் லியனாகவின் ஆட்டம் அந்த அணியை மீட்டது.

127 பந்துகளில் 95 ஓட்டங்களைக் குவித்தார் லியனாக. இறுதியில் 49 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ஓட்டங்களை எடுத்து இலங்கை வெற்றிபெற்றது.

இத்தொடரில் இவ்விரு அணிகளும் மூன்று முறை ஒருநாள் போட்டிகளில் மோதும். தற்போது 1-0 எனும் ஆட்டக் கணக்கில் முன்னணி வகிக்கிறது இலங்கை. சனிக்கிழமையன்று நடைபெறவிருந்த முதல் போட்டி மழையால் நடக்கவில்லை.

இரண்டாம் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பின் ஆர். பிரேமதாசா விளையாட்டரங்கில் நடைபெற்றது. மூன்றாம் போட்டியும் அங்கு வியாழக்கிழமையன்று நடைபெறும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!