You are here

விளையாட்டு

‘பலோன் டிஓர்’ விருது வென்ற மோட்ரிச்

பாரிஸ்: இவ்வாண்டுக்கான பலூன் டிஓர் எனும் உயரிய காற்பந்து விருதை ரியால் மட்ரிட், குரோ‌ஷிய வீரர் லூக்கா மோட்ரிச் தட்டிச் சென்றுள்ளார். அண்மைய ஆண்டுகளில் இந்த விருதை பார்சிலோனாவின் லயனல் மெஸ்ஸியும் ரியால் மட்ரிட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் மாறி மாறி வென்று வந்தனர். இம்முறை 33 வயது மோட்ரிச் விருதைத் தமக்குச் சொந்தமாக்கிக்கொண்டார். கடந்த மே மாதம் சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியை ரியால் மட்ரிட் வென்றது. ரியால் மட்ரிட்டின் வெற்றிக்கு மோட்ரிச் முக்கிய பங்காற்றினார்.

ஹாக்கி: இந்தியா, பெல்ஜியம் சமநிலை

புவனேஸ்வர்: ஒடிசாவில் நடைபெற்ற உலகக் கிண்ண ஹாக்கி தொடரில் இந்தியா, பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான போட்டி 2=2 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது. ஆண்களுக்கான 14வது உலகக் கிண்ண ஹாக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்தியா, பெல்ஜியம் அணிகள் நேற்று முன்தினம் மோதின.

சுசுகி கிண்ண அரையிறுதி: வியட்னாம் வெற்றி

பக்கலோட்: பிலிப்பீன்ஸ் காற் பந்துக் குழுவின் தலைமைப் பயிற்றுவிப்பாளரான சுவென் கோரன் எரிக்சன் தமது முதல் தோல்வியைச் சந்தித்துள்ளார். பிலிப்பீன்சின் பக்கலோட் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏஎஃப்எஃப் சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டியின் அரையிறுதிச் சுற்றின் முதல் ஆட்டத்தில் வியட்னாம் குழு பிலிப்பீன்சை 2=1 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. அந்நிய மண்ணில் கிடைத்த இந்த வெற்றியின் மூலம் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும் வலுவான நிலையில் உள்ளது வியட்னாம். ஆட்டத்தின் 12வது நிமிடத்தில் வியட்னாமின் தா க் கு த ல் ஆட்டக்காரர் நுவென் ஆன் டுக் தலையால் முட்டிய பந்து வலைக்குள் பாய்ந்து கோலானது.

தப்பித்தோம் பிழைத்தோம் என வென்ற லிவர்பூல்

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் ஆட்டமொன்றில் நேற்று அதிகாலை லிவர்பூலை எதிர்கொண்டது எவர்ட்டன் குழு. இதில் ஆட்டத்தின் பெரும் பகுதி லிவர்பூலை திக்குமுக்காட வைத்த எவர்ட்டன் இறுதியில் ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில், 96வது நிமிடத்தில், கோல்காப்பாளர் பிக்ஃபர்ட் செய்த தவற்றால் தோல் வியைத் தழுவியது.

லா லீகா காற்பந்து: முன்னேற்றப் பாதையில் ரியால் மட்ரிட்

பெர்னபாவ்: ஸ்பானிய லா லீகா காற்பந்துப் போட்டியில் வெலன் சியாவை வீழ்த்திய ரியால் மட்ரிட் முதலிடத்திலுள்ள செவ் வியாவுடனனான புள்ளிகள் இடைவெளியை மூன்றாகக் குறைத்துள்ளது. தொடக்க நேரத்தில் வெலன் சியா குழுவின் வாஸ் போட்ட சொந்த கோலைத் தவிர ஆட்டத்தின் கடைசி நேரம் வரை எந்த கோலும் விழ வில்லை. 83வது நிமிடத்தில் லுகாஸ் வாஸ்குவேஸ் போட்ட ஒரு கோலால் 2 கோல்கள் வித்தி யாசத்தில் வெற்றி பெற்றது ரியால் மட்ரிட்,

‘வெற்றி பெறவேண்டும் என்ற வெறி இல்லை’

சௌத்ஹேம்டன்: அவமானகரமான தோல்வியைத் தவிர்த்தாலும் மான் செஸ்டர் யுனைடெட் வீரர்களிடம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆவேசம் இல்லை என்று கூறியுள் ளார் அதன் நிர்வாகி மொரின்யோ. முதலில் கோட்டைவிட்டு விட்டு பின்னர் ஆட்ட நேரம் முழுவதும் அதைச் சரிக்கட்டுவதையே மான் செஸ்டர் யுனைடெட் வீரர்கள் இப் பருவத்தில் வழக்கமாக கொண் டுள்ளார்கள். இது நேற்று அதிகாலை நடந்த சௌத்ஹேம்டன் குழுவிற்கு எதி ரான பிரிமியர் லீக் ஆட்டத்திலும் தொடர்ந்தது. முதல் 20 நிமிடத்தில் 2 கோல் கள் போட்டு முன்னிலை கண்டது சௌத் ஹேம்டன். ஆம்ஸ்ட்ராங், செட்ரிக் சோர்ஸ் இருவரும் போட்ட அந்த கோல் களால் ஆட்டம் சௌத்ஹேம்ட னின் கட்டுக்குள் சென்றது.

‘ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்தியாவிற்கு நல்ல வாய்ப்பு’

சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை வீழ்த்த இந்தியாவுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆஸ்தி ரேலிய முன்னாள் அணித் தலை வர் ஸ்டீவ் வாக் கூறியுள்ளார். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதவுள்ளன. முதல் டெஸ்ட் போட்டி வரு கிற 6ஆம் தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்லாத நிலையில், இந்த டெஸ்ட் தொடர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் வாக் இணையத் தளத்துக்கு அளித்த பேட்டியில், “ஆஸ்திரேலிய தொடருக்காக இந்திய அணி தன்னை நல்ல முறையில் தயார்ப்படுத்தியுள்ளது.

போர்ன்மத்திற்கு எதிராக போராடி வென்ற மான்செஸ்டர் சிட்டி

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தின் மற்றோர் ஆட்டத் தில் போர்ன்மத்திற்கு எதிராக விளையாடிய மான்செஸ்டர் சிட்டி வெற்றிக்காக போராட வேண்டி இருந்தது. பெர்னார்டோ சில்வா போட்ட கோலால் 16வது நிமிடத்திலேயே முன்னிலை பெற்றது சிட்டி. அதையடுத்து லிரோய் சானே உதைத்த பந்தை போர்ன்மத் கோல் காப்பாளர் அஸ்மிர் பெகோவிச் தடுத்த நிலையில், தொடங்கியது சிட்டியின் போராட்டம். டாவிட் சில்வா களமிறக்கப்படாத தும் காயம் காரணமாக செர்ஜியோ அகுவேரோ வெளியேறியதும் சிட் டிக்குச் சவாலாக இருந்தது.

இந்தியா-பெல்ஜியம் மோதல்

புவனேஷ்வர்: உலகக் கிண்ண ஹாக்கிப் போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் தலைநகர் புவனேஷ் வரத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் மன்பிரீத் சிங் தலைமையிலான இந்திய அணி ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பெல்ஜியம், கனடா, தென்னாப் பிரிக்கா ஆகிய அணிகள் அந்தப் பிரிவில் உள்ளன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 5=0 எனும் கோல் கணக்கில் பந்தாடியது. இரண்டாவது ஆட்டத்தில் பெல் ஜியம் அணியை இன்று அது சந்திக்கிறது. இந்திய அணி பெல்ஜியத்தை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்புடன் இருக் கிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா சமநிலை

சிட்னி: இந்தியா-ஆஸ்திரேலிய கிரிக் கெட் அணிகள் மோதும் நான்கு நாள் பயிற்சி ஆட்டம் சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல்நாள் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது நாளில் இந்திய அணி பந்தடித்தது. இந்தியா 358 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிரித்விஷா (66 ஓட்டங்கள்), அணித் தலைவர் விராத் கோஹ்லி (64 ஓட்டங்கள்), ரகானே (56 ஓட்டங்கள்), புஜாரா (54 ஓட்டங்கள்), விஹாரி (53 ஓட்டங்கள்) ஆகிய 5 வீரர்கள் அரை சதம் அடித்தனர். ஆரோன் ஹார்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Pages